இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 1

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் பதிவுகள் நமது தளத்தில் தொடர்கின்றன… இது முதல் பகுதி…

உடனிருந்து கொல்லும் வியாதிகளின் அறிக்கை

பஹல்காம் படுகொலையை நிகழ்த்திய பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசும் ராணுவமும் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாடே ஒன்றுபட்டு நிற்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அபஸ்வரமாக ‘எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் ஈனக்கும்பல் ஒன்று ஒரு வெறுப்பறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதற்கு ஆதரவும் தெரிவித்திருக்கின்றனர், எழுத்தாளர் என்று சொல்லித் திரிவோர்.  ‘தமுஎகச’ என்ற இடதுசாரி அமைப்பின் முன்னெடுப்பில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையை நாம் ஏற்கவில்லை. எனினும், இத்தகைய புல்லுருவிகள் நம்முடன் இருப்பதை பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம். இதற்கு எதிரான கண்டனங்கள் தொடர்ந்து நமது தளத்தில் வெளிவரும்….

உருவகங்களின் ஊர்வலம் – 78

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #78...