கவிதையின் இலக்கணம்

கவிதையின் இலக்கணம் குறித்த மகாகவி பாரதியின் இந்தக் கட்டுரையில் (சுதேசமித்திரன்) ‘ஹொக்கு’ என்று குறிப்பிடப்படுவது தான் இன்றய ஹைகூ கவிதை.நூறாண்டுகளுக்கு முன்னமே அதனை அறிந்திருந்தார் நமது மகாகவி. பாரதியின் வசன கவிதைகளே தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தோற்றுவாய். இக்கட்டுரையில் கூறியுள்ள பல அம்சங்களை தனது வசன கவிதைகளில் மகாகவி பாரதி பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.

செந்தமிழ்த் தேன்மொழியாள்…

திரையுலகை ஆக்கிரமித்த திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், அந்த இயக்கத்தின் இளம் நாற்றாக வெளிப்பட்ட கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் இது. ‘மாலையிட்ட மங்கை’ (1958) என்ற இந்தத் திரைப்படமும், இந்தப் பாடலும் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமாகின. இத்திரைப்படத்தின் 15 பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. படத்தின் தயாரிப்பாளரும் அவரே. கவியரசரை தமிழகத்திற்கு முழுமையாக அறிமுகம் செய்வித்த திரைப்படம் இது எனில் மிகையில்லை.

குருவும் ஆசிரியரும்…

காஞ்சிப் பெரியவர் என்றும் பரமாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் ஞானி. அவரை பிராமணர் சமூகத் தலைவராக மட்டுமே குறுக்கும் போக்கு தேவையற்றது. அவரது அருளுரைகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ பல்துறை ஞானக் களஞ்சியம். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே…