கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 2

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி, அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது இரண்டாம் பகுதி…

ஸ்வதந்திரவீர் சாவர்க்கர்: பார்த்தாக வேண்டிய படம்

ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவசரமாக கதையைச் சொல்ல நினைக்காமல், ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக நிதானமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு திரைப்படமாக இது உயர்ந்து நிற்பது இந்த உத்தியால்தான்.

கழிசடைக்கு விருதா? கலைஞர்கள் கண்டனம்

கர்நாடக சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்துள்ளனர். அவருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இசைக்கலைஞர்கள் பலரும் துணிவுடன் முன்வந்து,  ‘இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர்.  வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா சொற்பொழிவாளர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, பாடகர்களான திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்), சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பம்,  பெங்களூர் மிருதங்க இசைக் கலைஞர் அர்ஜுன் குமார் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இப்பட்டியலில் மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.

சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்

‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று இரண்டு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு காக்க வரும் என்று காத்திருந்து பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன….