தனது மகன் தேரில் செல்கையில் அறியாமல் நேரிட்ட விபத்தில் பசுவின் கன்று இறந்ததனால் ஏற்பட்ட தோஷத்துக்குத் தண்டனையாக தனது மகனையே அதேபோல தேர்க்காலில் இட்டு நசுக்கிக் கொன்றவன் மனுநீதி சோழன்; அதுவே மனு நீதி சாத்திரம் சொல்லும் அறமென்று கூறியவன். உலக உயிர்கள் அனைத்தையும் சமமாக பாவிக்கும் இந்தக் குணமே தமிழக சரித்திரத்தில் அவனுக்கு நிலையான இடம் அளித்திருக்கிறது. இதுவே அருளாளர் வள்ளலாரால் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலாகப் பாடவும் பெற்றது. அந்த நூலின் நிறைவுப்பகுதி இது…
Tag: வள்ளலார்
மனுமுறை கண்ட வாசகம்- 4
மகனால் நேரிட்ட பசுக்கொலைக்கு பிராயச்சித்தம் செய்து விடலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் மனுஸ்மிருதியில் கூறி இருப்பதாகவும் கூறும் அமைச்சர்களின் சமாதானத்திற்கு மனுநீதி சோழன் கூறும் பதில் அற்புதமானது. பசுவை வள்ளலார் எங்ஙனம் மதித்தார் என்பதற்கான சான்று ‘மனுமுறை கண்ட வாசகம்’... இதோ பகுதி -4...
மனுமுறை கண்ட வாசகம்- 3
“மனுநூலில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்தூரம் நீண்ட பெயரைச் சுமந்த நான், என் புத்திரனுக்காக அமைச்சர்களாகிய நீங்கள் சொல்வது போல நடந்தால் உலகம் என்னைப் பழிக்காதா?” என்று கேட்கிறார் மனுநீதி சோழன். வள்ளலார் மனுநீதி நூலைப் போற்றியதற்கான ஆதாரம் ‘மனுமுறை கண்ட வாசகம்’ அல்லவா? இதோ பகுதி-3...
மனுமுறை கண்ட வாசகம் -2
தமிழின் ஆரம்பகால உரைநடை என்பதால் சற்று நிதானமாகப் படிக்க வேண்டிய, நெடும் வாக்கியங்கள் கொண்ட நூல் வள்ளலாரின் ‘மனுமுறை கண்ட வாசகம்’. செய்யுள் உரைநூல்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழின் எழுத்துநடையை ஆற்றொழுக்கான உரைநடைக்கு மாற்றும் முயற்சியில் இந்நூல் முக்கியமான ஒரு மைல்கல். மனுநீதி சொல்லும் அறங்களையே வள்ளலார் இந்நூலில் சுட்டிக்காட்டுகிறார்… இது இரண்டாம் பகுதி...
மனுமுறை கண்ட வாசகம் -1
மனுநீதி சாஸ்திரம், சனாதனம் ஆகிய சொற்களைக் கேட்டாலே தமிழகத்தில் ஒரு சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. இந்தக் கும்பல் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளை திராவிட இயக்கத்தின் கருத்தியல் முன்னோடியாகக் கொண்டாடுகிறது. இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மையில் திராவிடக் கருத்தியலுக்கு நேர்மாறானவர் மட்டுமல்ல, சனாதனத்தின் காவலராக அவதரித்தவர் வள்ளலார். அவர் மாணவர்களுக்கு பாடம் புகட்ட 1854-இல் எழுதிய ‘மனுமுறை கண்ட வாசகம்’ உரைநடை நூலே இதற்கு ஆதாரம். “தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ?” என்று மனுநீதி சோழன் புலம்புவதாக இந்நூலில் ஒரு காட்சி வருகிறது. தெய்வத்தை இகழ்ந்து ஆணவமாகத் திரியும் எத்தர்களுக்கு வள்ளலார் என்ற பெயரைச் சொல்லவே தகுதியில்லை.
வள்ளலார் ஒரு சனாதனியே!
வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும், ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....
ஆன்மநேயம் கண்ட அருளாளர்
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.