ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும்.
Tag: பாரதி உரைநடை
பஞ்சாங்கம்
கால நிலையை ஹிந்துக்கள் பலவிதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க.
தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்
நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமே செய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம். மற்ற தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம் (அதாவது, நான்கு வர்ணங்களென்ற வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது.
மாலை
நாம் விரதம் எடுத்தவுடனே, அதை நிறைவேற்றத் தக்க மன உறுதி நமக்குண்டா என்று பார்ப்பதற்காக, இயற்கைத் தெய்வம் எதிர்பாராத பல ஸங்கடங்களைக் கொண்டு சேர்க்கும். அந்த ஸங்கடங்களை யெல்லாம் உதறி யெறிந்து விட்டு நாம் எடுத்த விரதத்தை நிறைவேற்ற வேண்டும். விரதம் இழந்தார்க்கு மானமில்லை. விரதத்தை நேரே பரிபாலனம் பண்ணினால் சக்தி நிச்சயம்.
குணமது கைவிடேல்
எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கு இருந்த தேக பலமும், சௌகரியமும், தீர்க்காயுளும் இந்தத் தலைமுறையிலே ஏன் இல்லை? நாளுக்கு நாள் எனது தேசத்தார்கள் குறுகி, மெலிந்து துர்பலமடைந்து, க்ஷீணித்து அற்பாயுஸாக ஏன் மடிகிறார்கள்? இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்பு, கஸரத் இவை பழக்கும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன். நான் இப்படிச் செய்வதினால் எந்தச் சட்டம் முறிந்து போகிறது?
ஆசாரச் சீர்திருத்தம்
“வேண்டியவர்கள் எல்லாம் பூணூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்கள் எல்லாரும் பூணூல் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்றுபோலே, இல்லா விட்டாலும் ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்” என்றேன். “அன்பே சிவம்” என்று பிரமராயர் சொன்னார்.
வருங்காலம்
வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மனவுறுதியினாலும், பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பி வாருங்கள். உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க.
மதிப்பு
இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால், அவன் ராஜாங்கம் முதலிய ஸகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும்.
பருந்துப் பார்வை
காசியிலே ஹிந்து ஸர்வகலா சங்கம் கட்டும் போது பல மாளிகைகள் ஹிந்து சிற்பத்தைத் தழுவியிருக்க வேண்டும். நவீன பாடசாலைகளுக்குரிய லக்ஷணங்கள் குறையக் கூடாது. ஆனால், சிற்பத்தின் மேனி சுதேசிய விஷயமாக இருக்க வேண்டும். பாரத தேசத்துச் சிற்பிகளிலே தமிழ்நாட்டு ஸ்தபதிகள் ஒரு முக்கியமான அங்கமாவர். வங்கத்திலே மஹா கீர்த்தியுடன் சோபிக்கும் நவீன சாஸ்திரிகளில் நாயகராகிய அவனீந்த்ர தாகூர் கூட இக்காலத்திலும் தமிழ்நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாக மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
விசாரணை
பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும் என்பதை அநேக நீதிசாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார்களின் தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின் கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.
பழைய உலகம்
இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸப்படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப் பற்றி எனக்கு அதிக சிரத்தையில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவது தான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு.
உடம்பு
நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. காரஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப் படுத்தும் வஸ்துக்கள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.
மிருகங்களை நாகரீகப்படுத்தும் வழி
இரண்டு சிக்கிமுக்கிக் கல்-துண்டுகளை ஒன்றுக் கொன்று தட்டினால் தீயுண்டாக்கி விடலாம். இத்தனை கோடானுகோடி அடிமை ஜந்துக்களுக்கும் இன்று வரை இந்த சாதாரண யுக்தி புலப்படாமல் போனது வியப்புக்குரிய செய்தி யன்றோ? இதுபற்றியே, முற்கால ரிஷிகள் தீயை முதற் கடவுளாகப் போற்றினர் போலும். மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியையும் பூமண்டலாதிக்கத்தையும் அவன் நியாயமான வழியில் உபயோகப் படுத்தவில்லை.
குரு
காசுக்கும் அதிகாரத்திற்கும் எல்லாருந்தான் வாயைப் பிளக்கிறார்கள். ஆனாலும்,ரோமபுரியில் கிறிஸ்தவக் குருக்கள் ஐரோப்பா எல்லை முழுதிலும் பூமியாட்சி விவகாரங்களில் தலையிட்டு, ராஜாக்களுடன் கூடியும் பகைத்தும் கலகங்கள் ஏற்பட்டுத்தியது போல் நமது தேசத்துப் புரோஹிதரும் குருக்களும் செய்ததில்லை.
தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை
...எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்று மனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்? என்ன காரணம்?