நீதிமன்றத் தீர்ப்பும் நியாயத்தின் குரல்களும்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஹிந்துக்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு. அதுதொடர்பான எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் சிலரின் முகநூல் பதிவுகள்…

திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்...

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தேவையே!

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தமிழ்நாட்டில் நடத்தத் தொடங்கி இருக்கிறது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆயினும் இது காலத்தின் தேவையாக உள்ளது. இது தொடர்பான கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகும். இது கட்டுரை- 1; பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யாவின் முகநூல் பதிவு நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது...

வாழ்த்துவது ஒரு பண்பாடு

பொருள் புதிது- தீபாவளி மலரின் நான்காம் இதழ்,  துக்ளக் வார இதழில் பணிபுரியும் எழுத்தாளர் திரு. துக்ளக் சத்யா அவர்களின் பதிவு…

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 1

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு பயந்து அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது முதல் பகுதி…

புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக வாக்காளர்கள் ஆகலாமா?

தமிழக வாக்காளர் பட்டியலில் ஆறு லட்சம் பிகார் தொழிலாளர்களை இணைக்க தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முயற்சி நடப்பதாக சில அதி மேதாவிகள் புகார் கூறி வருகின்றனர். இவ்விஷயத்தில் உண்மை என்ன என்று பார்க்கலாமா?

முருக பக்தர்மாநாடு: பிரதிபலிப்புகள்- 3

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

ஆபரேஷன் சிந்தூர் – இரு பதிவுகள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் இரு பதிவுகள் இங்கே…

மோதல் நின்றது நல்லது தான்

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே யதார்த்தமானது என்கிறார் பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா. இது இவரது முகநூல் பதிவு….

இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 1

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் பதிவுகள் நமது தளத்தில் தொடர்கின்றன… இது முதல் பகுதி…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

மாநில ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு

மாநில ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு எதிராகத் தீர்ப்பளித்திருப்பது நாடு முழுவதும்  பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நமது வாசகர்கள் அறிவதற்காக, இது தொடர்பான செய்திகளும், இரு விமர்சனங்களும் (திருவாளர்கள் பா.பிரபாகரன், துக்ளக் சத்யா) இங்கே அளிக்கப்பட்டுள்ளன…

ஆட்சி மாற்றமல்ல, அரசியல் மாற்றமே தீர்வு

தமிழகத்தில் ஓர் அமைதியான அரசியல் மாற்றம் தொடங்கிவிட்டது என்று அவதானிக்கிறார் பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா.

மும்மொழியும் தமிழக அரசும்

தேசிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் தவறான கற்பிதங்களின் அடிப்படையில் ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் உணர்ச்சி அலைகள் தூண்டிவிடப்படுகின்றன. இந்நிலையில் இது தொடர்பான சில பதிவுகளை நமது தளம் இங்கே பதிவு செய்கிறது...