தமிழகத்தில் இசை என்றால் இளையராஜா தான். அவரது 81ஆவது பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன் (ஜூன் 2) அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தனது முகநூல் பக்கத்தில் திரு. ச.சண்முகநாதன், இசையை ரசித்து, ருசித்து, கிறங்கி எழுதிய பதிவு இது... தாமதமான மீள்பதிவு என்றாலும், என்றும் நினைவில் கொள்ள வேண்டிய இனிய பதிவு... இளையராஜா அவர்களுக்கு இதைவிட நம்மால் என்ன செய்துவிட முடியும்?
Tag: ச.சண்முகநாதன்
ராமனின் காதல்மொழி
அழகான பயணம், அருகில் காதலுடன் காதலி. இனிமையான உரையாடல். இப்படி பயணத்தில் காதல்மொழி பேச வாய்க்கப் பெற்றவர் கடவுளின் செல்லப்பிள்ளைகள்.
சிந்திக்கச் சொன்னாரா?
சொந்தப் புத்தி உள்ள எவனாவது தான் வளர்த்த குழந்தையை - அதுவும் சொத்தைப் பாதுகாக்க - கல்யாணம் செய்து கொள்வானா? சொந்தப் புத்தி உள்ளவன் எவனாவது அடுத்தவன் அணியும் பூணூலை கிலோக் கணக்கில் அறுக்கச்சொல்வானா?
கழிசடைக்கு விருதா? கலைஞர்கள் கண்டனம்
கர்நாடக சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்துள்ளனர். அவருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இசைக்கலைஞர்கள் பலரும் துணிவுடன் முன்வந்து, ‘இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர். வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா சொற்பொழிவாளர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, பாடகர்களான திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்), சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பம், பெங்களூர் மிருதங்க இசைக் கலைஞர் அர்ஜுன் குமார் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இப்பட்டியலில் மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.
இதயம் கூடவா இல்லை?
CAA, மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை விரைவுக்கரம் நீட்டி ஆறுதல் தருகிறது. ஏனென்றால் மத ரீதியான துன்புறுத்தல், மானமுள்ள மனிதரின் கால்களில் தார் ஊற்றுவது போல. எங்கும் நகர விடாது, எதையும் விருப்பத்துக்கு செய்ய விடாது. அதற்கு ஆறுதல் தரும் மருந்து CAA.
அயோத்தியாயணம்- 11
500 வருட ரணம், இன்று ஆறியிருக்கிறது. கோடி கோடி பக்தர்களின் மனங்களில் ஆட்சி செய்த ராமபிரான், தான் பிறந்த இடத்தில் ஒரு குடிசையில் இருந்து வந்தது விதியின் பிழையா? மனித மதியின் பிழையா? எது எப்படியிருப்பினும் நம் ராமன் திரும்பினான்.
அயோத்தியாயணம்- 10
பிரிந்த கன்றைப் பார்த்த தாயாருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி, ராமனை மீண்டும் பார்த்ததில். மாயையால் பிரிந்தவர்க்கு, ராமனைப் பார்த்த மாத்திரத்தில் பரப்பிரம்மத்தைக் கண்டது போல இருந்தது.
அயோத்தியாயணம் – 9
நம் தலை பட வேண்டும். கூப்பிய கைகள், கண்ணீர் திரையிடும் கண்கள், உணர்ச்சியிழக்கும் கால்கள், இப்படித்தான் இருப்போமா?
அயோத்தியாயணம்- 8
ஒரு பெண்மணி 32 வருடங்களாய் மௌன விரதம் இருந்திருக்கிறார், ராமர் கோயில் அமையும் வரை பேசப் போவதில்லை என்று விரதம். எதிர்பார்ப்பு எதுவில்லாமல் ராமன் மீதுள்ள அன்பு மட்டும் மேலோங்கி. ஒரு பக்தர் காலால் நடக்காமல் கைகளாலேயே நடந்து செல்கிறார். இன்னொரு பக்தர் நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு நடந்தே போகிறார், ‘என் ராமன் மீதுள்ள அன்பினால்’ என்று உள்ளம் பூரிக்கிறார்.
அயோத்தியாயணம்- 7
அவசரமாகத் திறக்கப்படுகிறது ராமர் கோயில் என்று சிலர் கூனிமொழி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ராமர் கோயில் வரக் கூடாது என்பதுதான் முதல் குறிக்கோள். அது மோடியின் தலைமையில் வரக் கூடாது என்பது அடுத்த குறிக்கோள். போகட்டும். ராமனின் வாழ்வில் அனைத்தும் அவசரமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது.
அயோத்தியாயணம்- 6
200 ஆண்டுகளுக்கு முன்னர், ராமனுக்காக ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றியவர் தியாகராஜ ஸ்வாமிகள். வாழ்வெல்லாம் ராம நாமம் ஜெபித்து பின்வரும் சந்ததியினரையம் ராம நாமம் பாடச் செய்தவர். "ஓரக்கண்ணால் ஒரு பார்வை பாரேன் ராமா" என்று அன்பொழுக உருகியவர்.....
அயோத்தியாயணம்- 5
ராமன் ஹனுமனை நோக்கி, நெகிழ்ச்சியுடன், “உதவி செய்வதில் உனக்கு நிகர் யாருளர்? நீ எனக்குச் செய்த உதவிக்கு என்னால் எதுவும் ஈடு கொடுக்க முடியாது. என்னை ஆரத் தழுவிக்கொள்” என்று அந்த கருணைமாக் கடவுளும், தான் ஹனுமனுக்கு, கடன்பட்டதாய்ச் சொல்கிறான்.
அயோத்தியாயணம்-4
கோயிலைக் காப்பதற்காக உயிரையும் கொடுத்த மன்னர்கள் பிறந்த நாடு பாரத நாடு. அதே வழியில், இன்று ஒரு கோயிலுக்கே உயிர் கொடுக்கும் மன்னன் ஆளுகின்ற நேரம் இது.
அயோத்தியாயணம்-3
அங்கே அறம் பெரிது, தர்மம் பெரிது. பாசம் பெரிது, வீரம் பெரிது. அயோத்தியாவில் மதில்களும் பெரிது. அயோத்தியின் புகழ் பெரிது. அயோத்தியாவைச் சுற்றியுள்ள மதில், மலைகளைப் போல வலிமையாய், நகர மாந்தரைக் காக்கும் காவல் தெய்வமாய் இருந்தது; காத்து வந்தது.
அயோத்தியாயணம்-2
ஸ்ரீமன் நாராயணன் அயோத்யாவைத் தேர்தெடுத்தான், அவதாரம் புரிய. அயோத்தியா போல தேவலோகத்திலும் ஒரு நகர் இல்லை “இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?”