நாடாளுமன்ற மக்களவையில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமான செங்கோல் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கிறுக்குத்தனமாக உளறியதற்கு தகுந்த பதிலடி அளிக்கிறார் திரு. ச.சண்முகநாதன். ‘சீ, சீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு’ என்று வெகுண்டு மகாகவி பாரதி பாடியது இத்தகைய ஈனப் பிறவிகளை நினைந்து தானோ?
Tag: செங்கோல்
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: நூல் அறிமுகம்
தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: பதிப்புரையும் அணிந்துரையும்
நமது தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாக உள்ளது. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரை, அணிந்துரைகள் இங்கே...
நாடாளுமன்றத்தில் செங்கோல்
விரைவில் வெளியாக உள்ள ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ நூலில் இடம்பெறவுள்ள குறிப்பு இது...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- முன்னுரை
இந்தத் தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் (21 அத்தியாயங்கள்) நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது; விரைவில் வெளியாக உள்ள இந்நூலின் முன்னுரைப் பகுதி இது...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 21
காலந்தோறும் நமது தாய்மொழி எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான நிகழ் சாட்சியமாகவே, நமது ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தேடலைக் கூற முடியும். நாட்டு மக்கள் நலம் பெற உதவும் மன்னரின் செங்கோலுக்கு நமது இலக்கியங்கள் சுமார் 2,500 ஆண்டுகளாக அளித்த முக்கியத்துவம் கடந்துபோன அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் நிறைவாக, நல்லாட்சி, செங்கோல் குறித்து, தமிழ்த்தாயின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கருத்து என்னவாக இருந்தது என்று அறிவோம்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 20
தமிழ் இலக்கிய- இலக்கணங்களில் செங்கோலைத் தேடும் நமது இலக்கிய யாத்திரையின் நிறைவுப் பகுதி மகாகவி பாரதியே. எனினும் அவருக்கு முன்னோடியாக விளங்கியவர், தமிழகத்தின் தவச்செம்மல், சநாதனம் காக்க உதித்த அறச்செம்மலான வள்ளலாரே.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 19
நமது நாட்டில், நல்லரசன் ஆளும் நாட்டில் மாதம் மும்மாரி பொழியும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக நிலவுகிறது. செங்கோலாட்சியின் அடையாளமே மாதம் மும்மாரி மழை தான் என்கிறது ‘விவேக சிந்தாமணி’ என்னும் பிற்கால நீதிநூல்....
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 18
தமிழ் இலக்கியத்தின் என்றுமுள சீரிளமைக்கு அடையாளமான இனிய பாசுரங்கள் வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காணப்படுகின்றன. அவற்றில் செங்கோல் ஏந்தி வரும் பாசுரங்கள் சிலவற்றை இங்கே நாம் காணலாம்...
நீதியின் அடையாளம் செங்கோல்!
செங்கோலின் சிறப்புகள் குறித்து பத்திரிகையாளர் கோதை ஜோதிலட்சுமி எழுதி ‘தினமணி’ நாளிதழில் வெளியான இனிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
தமிழ் மரபில் செங்கோலுக்கு தனி இடம்!
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்; மருத்துவர்; சிறந்த பேச்சாளர்; பாரதி ஆர்வலர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஜி20 இருக்கை பேராசிரியரான, டாக்டர் சுதா சேஷய்யன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது…
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17
நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 16
அகப்பாடல்களிலும் கூட செங்கோலையும், செங்கோன்மையையும் வலியுறுத்தும் தமிழ்ப் புலவர்களின் பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். மூவேந்தரைப் புகழும் வகையில் அமைந்த, இலக்கியச் சுவை மிகுந்த சில முத்தொள்ளாயிரம் அகப்பாடல்கள் இங்கே...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 15
பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகையில் அடங்கிய 11 நீதிநூல்களில் அரசு அறநெறிச் செய்திகள் 9 நூல்களிற் காணப்படுகின்றன. இவற்றில் திருக்குறள் தொடர்பான விரிவான செய்திகளை முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம். பிற 8 நீதி நூல்களின் செங்கோன்மைக் கருத்துகளை இங்கே காண்போம்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 14
மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.