மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வேதங்கள்

இன்று குவாண்டம் இயற்பியலில் நாம் காணுபவை புதியவை அல்ல. சில விஷயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை; அடிப்படை தத்துவ தரிசனங்களில் இருந்து முளைத்து வந்தவை. சிந்தனைக்கு/ நினைவுகளுக்கு நிறை உண்டு, பிரபஞ்சம் நிலையானது, பிரபஞ்ச அறிவும் விழிப்புணர்வும் இல்லாமல் உயிர்கள் தோன்றாது என்பனவெல்லாம் பாரதத்தில் அல்லது புராதன இந்தியாவில் தோன்றிய கருத்துகள்.