அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், இது கட்டுரையின் இறுதிப் பகுதி…
Tag: கருவாபுரிச் சிறுவன்
குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-1
அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. திரு. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்… இது கட்டுரையின் முதல் பகுதி…
நாவலர் ஞானபரம்பரையில் நன்மாணக்கர்கள்
நமது தர்மத்திற்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஞானபுருஷர் ஒருவர் தோன்றுவார் என்பது ஸ்ருதி வாக்கியம். அதற்கு ஏற்றாற் போல, யாழ்ப்பாணம் நல்லுாரில் தோன்றிய மகான் தான் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் அக்காலத்தில் நடமாடும் மடாலயமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை. அன்னாருடைய ஞானப் பரம்பரை யாழ்ப்பாணம் மட்டுமின்றி வழிவழியாக தமிழகமெங்கும் விரவி இருக்கிறது....
உடலுக்கு உழவாரம்… உள்ளத்திற்கு தேவாரம்!
முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.
உள்ளதைச் சொல்ல பயமோ?
காலத்தின் கோலத்தால் வார்த்தை வியாபாரியாக மாறிவிட்ட ஆன்மிக மேடைப் பேச்சாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வழக்கம் போல சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார். அவருக்கு, இலக்கிய ஆதாரங்களுடன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. கருவாபுரிச் சிறுவன்....
சொன்னாலும் விரோதம்! சொல்லாவிட்டாலும் விரோதம்!
தமிழக அரசு பழனியில் நடத்திய அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலரின் குறைகளை சுட்டிக்காட்டி, இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு கறுவாபுரிச் சிறுவன்...
என் கடன் பணி செய்து கிடப்பதே- 1
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: கம்பபாதசேகரன் திரு. இ.சங்கரன்…
பஞ்ச புராணம் ஓதும் மரபு
தமிழகத்தில் ஓதுவார்கள் இல்லாத திருக்கோயில்களில் முறைப்படி அவர்களை நிரந்தரமாக நியமனம் செய்து தமிழ் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுடைய பணியை அறிந்துணர்ந்து போற்றிச் செய்ய வேண்டும்; திருக்கோயிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைகளைச் செய்யவும், அர்ச்சனை டிக்கட் கிழித்துக் கொடுக்கவும் ஓதுவார்களை கட்டாயப்படுத்தக் கூடாது, நிர்பந்தப்படுத்தக் கூடாது. இவற்றை அறநிலையத் துறையினருக்கு வலியுறுத்தி, அவர்கள் இறைவன் திருச்சன்னிதி முன் விண்ணப்பிக்கும் திருமுறைகள் அதீத மகத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்ட எழுந்ததே இக்கட்டுரை...
சகல நன்மையருளும் சங்கர சதாசிவ மாலை
வரும் ஆக. 23ஆம் தேதி, சங்கரன்கோவில் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிரது. அதனையொட்டி, எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை இது….
தேவையான ஞானச் செருக்கு
தேசியகவியாகிய பாரதிக்கு ஒளவையார் பாடல்கள் மீது ஓர் ஒப்பற்ற மதிப்பு, மரியாதை இருந்தது என்பதை கீழ்க்கண்ட வரிகள் உணர்த்தும். “தமிழ் நாட்டில் மற்ற செல்வங்களை எல்லாம் இழந்து விட பிரியமா... அல்லது ஒளவையாரின் பாடல்களை இழக்க பிரியமா என ஒருவர் கேட்டால் நான் சொல்வேன். மற்ற செல்வங்களை எல்லாம் இழந்தாலும் மீண்டும் சாம்பாத்தியம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒளவை பிராட்டியாரின் பாடல்களை மட்டும் இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன், ஏனென்றால் அவை தமிழ்நாட்டின் தனிப்பெரும் செல்வம்” என்கிறார்.
ஆடித் தபசும் கோமதி சதரத்ன மாலையும்
சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் கோமதியம்மையின் ஆடித்தபசு விழா நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான திருவாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதிய இக்கட்டுரை இங்கு வெளியாகிறது...
கருவையந்தாதிகள் வரலாறும் பெயர்த் திரிபுகளும்
தென்காசி அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லூர் ‘திருக்கருவை’ என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உறையும் ஈசனைப் போற்றி வரதுங்கராம பாண்டிய மன்னர் (தென்காசிப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர்; கருவையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: பொ.யு. 1588- 1612) இயற்றிய மூன்று அந்தாதி நூல்களும் ‘திருக்கருவை அந்தாதிகள்’ என்று வழங்கப்படுகின்றன. பிற்கால சிற்றிலக்கியங்களில் மொழிவளமும் ஆன்மிக நலமும் கொண்ட இந்த அந்தாதி நூல்களை இயற்றியவர் வரதுங்கராம பாண்டியரின் சகோதர முறையினரான அதிவீரராம பாண்டியர் (இவர் நைடதம், வெற்றிவேற்கை நூல்களை எழுதியவர்; தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: 1564- 1610) என்று தமிழ்ப் பாடநூல்களில் தொடர்ந்து பிழையாக கற்பிக்கப்படுகிறது. இந்தப் பிழையை நேர்செய்ய வேண்டி, இதே ஊரைச் சேர்ந்தவரும் இலக்கிய ஆய்வாளருமான திரு. பா.ஸ்ரீராமகிருஷ்ணன் (சிறுவாபுரிச் சிறுவன்) எழுதியுள்ல இனிய ஆய்வுக் கட்டுரை இது…