அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன...
Category: தொடர்
வாழும் சனாதனம்!- 1
“ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ?” என்று கேட்பார் மகாகவி பாரதி. “சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் சூரியனுக்கு எந்தக் கெடுதியும் இல்லை” என்பது பழமொழி. அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டபோது, இந்த இரண்டும் தான் நினைவுக்கு வந்தன. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடங்குகின்றன...
ராமாயண சாரம்- 32
ராமன் கதை கேட்டவர்கள், சொன்னவர்கள், இந்த நல்ல செயலினால், மனிதருக்குத் தலைவராகி, யமனை வெல்லும் தன்மையும் பெறுவார்கள்.
ராமாயண சாரம்- 31
முதன்முதலில் கைகேயி கால்களில் விழுந்து வணங்கிய பின்னரே, மற்ற தாயரின் கால்களில் விழுந்து வணங்குகிறான் ராமன். கைகேயி தவறு செய்திருந்தாலும், அதை மறந்து, அவளுக்கு முதல் மரியாதை செலுத்துகிறான் ராமன். பண்பின் சிகரம்!
ராமாயண சாரம் – 30
அனுமன் பெருமகிழ்ச்சியோடு அசோகவனத்துக்குச் செல்கிறான். என்னவென்று சொல்வது! சொல்ல வார்த்தை கிடைக்குமா? “அம்மா, நல்ல செய்தி” என்று சொல்வதா? “உனக்கு விடுதலை” என்று சொல்வதா? இவையெல்லாம் மிகவும் சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றுகிறது அனுமனுக்கு.
பாரதி போற்றும் தேசியக் கல்வி – பதிப்புரை
பொருள் புதிது தளத்தில் வந்த ‘பாரதி போற்றும் தேசியக் கல்வி’ தொடர் கட்டுரை தொகுக்கப்பட்டு, கோவையில் உள்ள சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால் நூலாக வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு திரு. எஸ்.ஸ்ரீராம்ஜி அளித்துள்ள அணிந்துரை / பதிப்புரை இது...
ராமாயண சாரம் (28-29)
இராகவன் தன் புனித வாளி ராவணனின் மார்பைத் துளைத்து முதுகு வழி சென்றது. அவன் செருக்கையும், வலிமையையும் பறித்துக்கொண்டு போனது ‘ஒருவன்’ வாளி. ராவணன் மனதில் சீதை மேல் இருந்த ஆசையையும் துழாவி பறித்துக்கொண்டு வெளியே போனது ராமனுடைய வில்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 8
கல்வி என்பது அறிவுப் பெருக்கமாக மட்டுமல்லாது, அதன் பயனாகவும் இருக்க வேண்டும். கோட்பாட்டு அறிவியல் பயன்பாட்டு அறிவியலாக மாறுகையில் தான், உலகம் பயனுறுகிறது. விண்ணியல் விதிகள் அனுபவமாகும்போது ராக்கெட் விண்ணைச் சாடிப் பாய்கிறது.
ராமாயண சாரம் (26-27)
வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன், தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலைகுலையச் செய்கிறான் ராமன்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 7
“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியிடம் விதைத்தார். அவரைத் தனது மானசீக குருவாக ஏற்ற பாரதி அதனையே தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.
ராமாயண சாரம் (24-25)
அன்றைய இரவு, மனித குலத்தின் ஓரு பெரும்போரை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. இலங்கையின் இரண்டு முனைகளில் இரண்டு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டு வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பொருதற்குக் காத்திருந்தனர். அடிபட்ட புலிபோல, தர்மத்தை நிலைநாட்ட வேண்டி ராமன் ஒரு முனையில். அதர்மியாக, அதீத ஆசை கொண்டு, யார் பேச்சையும் மதிக்காமல் திமிர் பிடித்த ராவணன் மறுமுனையில்.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 6
கல்வி மட்டுமல்லாது மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறார் மகாகவி பாரதி. அவரது ‘தேசியக் கல்வி’ திட்டத்தில் ‘சரீரப் பயிற்சி’க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ராமாயண சாரம்- 23
நளன் வானரத் தச்சன் என்றறியப் பட்டவன். It was not a random choice. அனுமன் இலங்கை செல்ல வேண்டுமென்பதும் நளன் சேது செய்ய வேண்டும் என்பதும், அவரவர் திறமையை உணர்ந்தே. Horses for courses.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 5
மகாகவி பாரதி தான் முன்வைத்த தேசியக் கல்வி என்ற திட்ட்த்தில் வலியுறுத்தும் பாடங்கள்: 1. எழுத்து, படிப்பு, கணக்கு, 2. இலேசான சரித்திரப் பாடங்கள், 3. பூமி சாஸ்திரம், 4. மதப்படிப்பு, 5. ராஜ்ய சாஸ்திரம், 6. பொருள் நூல், 7. ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம், 8. சரீரப் பயிற்சி, 9. யாத்திரை (Excursion) ஆகியன. ...
ராமாயண சாரம் – 22
ராமனின் சிறந்த பக்தன் அல்லவா அனுமன்? கோபத்தில், உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறான். ராவணன், சீதைக்கும் ராமனுக்கும், செய்த கொடுமைக்குப் பதில் சொல்லும் விதமாய் துவம்சம் செய்கிறான். அனுமனின் பராக்கிரமத்தை கம்பன் (at his best) தமிழில் வானளாவிய கவிதை செய்து வைத்திருக்கிறான்.