அன்றே சொன்னார் பாபா சாகேப் அம்பேத்கர்!

1947இல் இந்தியா மதரீதியாகப் பிளவுபட்டது. அப்போது,  ‘நாட்டு மக்களை மத அடிப்படையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்’ என்று சொன்னார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அதை அப்போதிருந்த அரசுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதன் கொடிய விளைவையே பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இன்றைய ஹிந்துக்கள் பரிதாபமாக அனுபவிக்கின்றனர் என்கிறார் திரு. டி.எஸ்.தியாகராஜன். இக்கட்டுரை, ‘தினமணி’யில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

திப்பு சுல்தான்: ஒரு திகில் கதை

கொடூரமான ரத்தக்கறை படிந்த வரலாற்றுக்கு உரியவரான திப்பு சுல்தான் ஒரு மனிதநேயப் புனிதர் போல இடதுசாரி ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறார். அவர்களின் சதிகளை தனது காத்திரமான ஆய்வுகள் மூலம் பொடிப்பொடி ஆக்கியவர் திரு. விக்ரம் சம்பத். அவரைப் பற்றிய கட்டுரை இது….

நூற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த அதன் தேசிய பொதுச்செயலாளர் திரு. தத்தாத்ரேய ஹோஸபலே எழுதி, யுகாதியன்று நாடு முழுவதும் பத்திரிகைகளில் வெளியான கட்டுரை இது…

கனலை விதைத்த சூரியன்

தேசியப் பேரியக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்த ஆண்டு (2025) தனது நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதனையொட்டி, அதன் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் குறித்த கட்டுரை அவர் பிறந்த தினமான யுகாதி நன்னாளை (மார்ச் 30) முன்னிட்டு இங்கு வெளியாகிறது.

கருணைமிகு கருவையம்பதி

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள  ‘கரிவலம்வந்தநல்லூரில்’ தொல்லியல் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்தப் புராதன ஊர் குறித்த கட்டுரையை இங்கு பதிவு செய்வதில் மகிழ்கிறோம்….

காந்தி ஆசிரம நூற்றாண்டு சிந்தனை

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டை ஒட்டிய, இரண்டாவது பதிவு இது....

சாவர்க்கரின் உண்மை வடிவைக் காண்போம்!

இந்தியாவில் இடதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட பொய்களால், சுதந்திரப் போராட்டவீரர் சாவர்க்கர் ஒரு வில்லனைப் போல தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். இந்த அநீதியை எதிர்த்து, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் எழுதியுள்ள கட்டுரை இது....

சக்கரவர்த்தித் திருமகன் அமைத்த ஆசிரமம்

திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தனது நூற்றாண்டை கடந்த 04.02.2025 அன்று எட்டியது. அதையொட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது…

மண்ணுக்கேற்ற பொதுவுடைமைவாதி

பொதுவுடைமைத் தத்துவத்தை பாரத மண்ணுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தவர் இந்திய சோஷலிச அரசியல்வாதிகளின் குருவாக மதிக்கப்படும் ராம் மனோகர் லோகியா. இவரது வாழ்வே ஒரு வேள்வி போன்றது; இளைய தலைமுறையினர் அறிய வேண்டியது….

தமிழகத்தின் சநாதன பாட்டி ஔவையார்

தமிழின் மூதன்னை ஔவையார் குறித்த இனிய கட்டுரை இது. தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியான இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....

ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி

இந்தியா இன்றும் சுதந்திரமாக இயங்குவதற்குக் காரணமான மாபெரும் தலைவர் ஜெ.பி. என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு இங்கே…

ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி

அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று. அதையொட்டி பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

ஈவெராவின் ஜாதி ஒழிப்பு ஒரு நாடகம்

1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. ப.ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் சில பகுதிகள் இங்கே… நினைவில் கொள்ளுங்கள் அவர் அந்தக் கால நியாயமான கம்யூனிஸ்ட்!

காரல் மார்க்ஸும் விஷ்ணு பாவாவும்

பொருளியல் முதல்வாதம் என்ற கருத்தியலில் அமைந்தது, காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல். அவருக்கு முன்னதாகவே, இதனை ஒத்த பொருளியல் சிந்தனையை பாரதப் பாரம்பரிய நோக்குடன் ஒருவர் இந்தியாவில் எழுதி இருக்கிறார். அவரைப் பற்றி இங்கே அறிவோமா?

காஷ்மீரில் ஒழியுமா பயங்கரவாதம்?

இன்னும் சில தினங்களில் (அக். 8) யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இத்தருணத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்கிறது, திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இந்தக் கட்டுரை….