பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கம் நிறுவப்பட்ட நாள்: 1951 அக்டோபர் 21. அதையொட்டி, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளவருமான திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது.

நம்காலத்து கர்மயோகி நரேந்திர மோடி

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75ஆவது பிறந்தநாளை (செப். 17) ஒட்டி, மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள வாழ்த்து மடல் இது.

துணை ஜனாதிபதியாகும் தமிழர்!

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும்  திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ஆம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ஆர். மிகப் பெரும்பான்மை வலுவுடன் வென்றிருக்கிறார்.

ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம், இந்து சமய வளர்ச்சி ஆகியவற்றை தம் வாழ்நாள் முழுவதும் குறிக்கோளாகக் கொண்டு அதற்காகச் செயலாற்றிய ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமென்றால் நாம் சுவாமி சகஜானந்தரை மட்டுமே காட்ட முடியும்.

தர்மம்தான் ஜெயிக்கும்! நேர்காணல்: இல.கணேசன்

நேற்று (15.08.2025) காலமான திரு. இல.கணேசன் அவர்கள், தமிழகத்தில் ஆர்,எஸ்.எஸ்., பா.ஜ.க. வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர். 2018இல் ‘வலம்’ மாத இதழுக்கு அவர் அளித்த பிரசுரமாகாத நேர்காணல் இது. அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் இந்த நேர்காணலில் இருப்பதால், இதனை முழுமையாக இங்கே வெளியிடுகிறோம்….

திரு. இல.கணேசன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

பாஜக மூத்த தலைவராக இருந்தவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான எல்.ஜி. என்கிற திரு. இல. கணேசன் அவர்கள் (80) இன்று (15.08.2025) மாலை சென்னையில் காலமானார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்....

சுதந்திரம் காக்கும் கொங்குநாடு

இந்தக் கட்டுரையின் அடிநாதம், நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் எவ்வாறு ஒருங்கிணைந்த பாரத அன்னையின் விலங்கொடிக்க முன்னிலையில் நின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது தான். அது  மட்டுமல்ல, தமிழகத்தின்  ஓர் அங்கமான கொங்குநாடு அந்த மூவரையும் எவ்வாறு அரவணைத்தது என்பதை சுட்டிக்காட்டி, நாட்டின் மனக்குரலாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை எடுத்துக் காட்டுவதும் நமது நோக்கம்.

சூழல் போராளியான இயற்பியல் விஞ்ஞானி

வாழ்க்கைப் பாதையில் இரு கிளைகள் பிரியும் இடம் வரும்போது பலரும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பது இயற்கை. எந்தப் பாதையில் பயணிப்பது? அப்படிப்பட்ட நிலைகளில் ஆழ்மனம் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் ஆழ்மனம் நமது ஆசைகள், லட்சியங்கள், எண்ணங்களின் சங்கமத் திடல். இப்படிப்பட்ட நிலை இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஒருவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் தேர்ந்தெடுத்த பாதை, சூழியலைக் காக்கும் போராட்டப் பாதை. அவர் தான், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய சூழலியல் போராளி வந்தனா சிவா.

எமர்ஜென்சியின் பொன்விழா ஆண்டு

கவிஞர் சுராகி என்கிற திரு. சு.ராதாகிருஷ்ணன், 1975இல் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியதால் வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர். அவரது நினைவோடைப் பதிவு இங்கே...

அவரது ஆன்மிக வீடு

திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!

தேசியம் காத்த தமிழர்

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான வாழ்க்கை.

சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டம் – ஒரு பார்வை

தமிழகத்தில் தீண்டாமையை திராவிடமும் கம்யூனிஸமும் ஒழித்துவிட்டதாக ஒரு மாயையான தோற்றம் உண்டு. இந்தக் கானல்நீர்த் தோற்றம் உண்மையல்ல என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் நிறுவுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்… இது இவரது முகநூல் பதிவின் மீள்பதிவு….

காங்கிரஸின் கபடமும் சிங்கத்தின் சிலிர்ப்பும்

சேத்தூர் சங்கரன் நாயர்- இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றொரு பெயர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே...

குழந்தைகள் உலகுக்கு உருவம் கொடுத்த வாண்டுமாமா

தமிழில் மழலை இலக்கியத்துக்கு பெரும் ரசிகர் படையை உருவாக்கியவர்; தனது படைப்புகளின் மூலமாக சிறுவர்களை எழுத்தாளராக்கியவர் ‘வாண்டுமாமா’. அவரது நூற்றாண்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. சந்திர.பிரவீண்குமார் ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.