புதுவையில் பூத்த யோக மலர்- 17

“விடுதலைக்குப் பிறகு நம் நாடு பல பிரச்சினைகளைச் சந்திக்கும். அதிலிருந்து மீண்டு வருவோம். தொழில்துறையில், வர்த்தகத்தில், ராணுவத் துறையில், அரசியல் களத்தில் அது மற்ற நாடுகளைப் போல மகத்தான முன்னேற்றத்தை நிகழ்த்தும். ஆனால் இந்த லௌகீக முன்னேற்றத்திற்காக தனது ஆன்மாவை - ஸ்வதர்மத்தை – இழக்கக் கூடாது. இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு இழந்தால் அது நம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கே பெரும் இழப்பாகும். எனவே எப்பாடுபட்டாவது இந்தியாவின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு புறவுலக முன்னேற்றம் மட்டுமல்ல அகத்திலும் (மனத்திலும்) முன்னேற்றமும் வலிமையும் பெறவேண்டும்”

புதுவையில் பூத்த யோக மலர்- 16

ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதத்தில்,  “இது நாடுகள் மற்றும் அரசுகள் இடையே நடக்கும் போர் என்று நாம் நினைக்கக் கூடாது. இது தெய்வ சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே நடக்கும் போர். நேச நாடுகள் பக்கம் பல்வேறு குறைகள் இருக்கலாம். ஆனால் அவற்றின் வெற்றி மானுட இனத்தின் பரிணாம முன்னேற்றத்திற்கான பாதையை அமைக்கும். அதற்கு எதிரான சக்திகள் வெற்றி பெற்றால் மனித இனம் பின்னடைவைச் சந்திக்கும். பரிணாம வளர்ச்சி தடைபடும்” என்று குறிப்பிட்டிருந்தார்...

புதுவையில் பூத்த யோக மலர்- 15

அரவிந்தரின் அகச் செயல்பாடுகள் பற்றி ஓரிரு குறிப்புகளை டாக்டர் பாரன் பதிந்துள்ளார்.  “இந்த அறையில் உள்ள சுவர்கள், மேஜை, நாற்காலி, புத்தகங்கள், நீங்கள், டாக்டர் மணிலால் எல்லாவற்றையும் இறைவனாகவே நான் பார்க்கிறேன். கற்பனை அல்லது மாயத் தோற்றங்களாக அல்ல. நிச்சயமாக நான் உணர்கிறேன்” என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்லியதாக அவர் குறித்துள்ளார்.

புதுவையில் பூத்த யோக மலர்- 14

ஸ்ரீ அரவிந்தருக்கு நேர்ந்த விபத்தின் குறிப்பு என்னவென்று பின்னாளில் கேட்ட போது,  “தரிசனத்தைத் தடுக்க ஏற்கனவே எதிர் சக்திகள் பலமுறை முயன்றுள்ளனர். அவற்றின் எதிர்ப்பை பலமுறை வென்று உள்ளேன். அவை என்னை விட்டுவிட்டு அன்னையைத் தாக்க முயற்சித்தன. நான் அவரைக் காப்பாற்ற முனைந்தேன். அவை என்னைத் தாக்காது என்று நினைத்து சற்றே தவறிவிட்டேன்” என்றார்....

புதுவையில் பூத்த யோக மலர்- 13

மனிதன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது அவரது யோக நெறியின் முதல் படி. பக்தி, கர்ம, ஞான யோகம் என்கின்ற வழக்கமான யோக மார்க்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படும் இதைப் பற்றி,  “எனது யோக நெறியில் குறுக்கு வழி இல்லை. ஆரம்ப நிலைகளைத் தவிர்த்து விட்டு கடைசியில் படியில் தாவி ஏற முடியாது. அது ஆபத்தானதும் கூட” என்று ஸ்ரீ அரவிந்தர் தனது ஒருங்கிணைந்த யோகத்தைப் பற்றி கூறியுள்ளார்.

புதுவையில் பூத்த யோக மலர்- 12

“ஸ்ரீ கிருஷ்ணர் உடலில் இறங்கிய நாளிது. கிருஷ்ணரின் வருகை மீ - மனத்தின் இறக்கம். (அதிமனம் =  சூப்பர் மைண்ட்.  மீ - மனம் = ஓவர் மைண்ட்) . இந்த மீ -மனம் அதிமனம் மற்றும் ஆனந்தத்திற்கு பாதை அமைக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஆனந்த மயமானவர். மீ மனத்தைக் கொண்டு அதிமனத்திற்கு அழைத்துச் செல்வார்”  என்று ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி தினத்தைப் பற்றி எழுதியுள்ளார்....

புதுவையில் பூத்த யோக மலர்- 11

இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். அது அவளுக்காக, அவளது ஆன்மா விழிப்புக்காகப் பெற வேண்டும். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதை விடவும் மிக பரந்த நோக்கம் விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசையும் அதன் செயல்பாடுகளையும் பார்ப்பதாகவே நம் கண்ணோட்டம் இருக்கிறது. நாம் நம்முடைய சொந்த தேசியத்தைக் கண்டடைய வேண்டும். அதை சுதந்திரம் பெறச் செய்ய வேண்டும்....

புதுவையில் பூத்த யோக மலர்- 10

நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன்? ஏனெனில் நம்முடைய அரசியல் உண்மையில் இந்தியத் தன்மையுடன் இல்லை. இது ஐரோப்பிய இறக்குமதி. ஐரோப்பிய வழிமுறைகளை போலி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் தேவை. நீயும் நானும் ஐரோப்பிய பாணி அரசியலில் தான் ஈடுபட்டிருந்தோம். நாம் அதைச் செய்யாவிட்டால் தேசம் எழுந்திருந்திருக்காது; வளர்ச்சி வந்திருக்காது. இன்னமும் அது தேவைப்படுகிறது, குறிப்பாக வங்காளத்தில். ஆனால் நிழலை விட்டு விட்டு சாரத்தைப் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது....

புதுவையில் பூத்த யோக மலர்- 9

‘ஆர்யா’ தொடங்கப்பட்ட நேரமும் முதல் உலகப்போர் தொடங்கிய நேரமும்  ஏறத்தாழ ஒரே நேரத்தில். இதை எதிர்பாராத நிகழ்வாகக் கருத முடியாது. உணர்வு தளத்தில் அழிவு சக்தியான போருக்கு எதிராக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஆன்மிக சக்தியின் பிரதிநிதியாக  ‘ஆர்யா’ வெளிப்பட்டது.

தேசப் பிரிவினை: காந்தியும் நேருவும்

கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் (பவன் கேரா) இந்தியன் எக்ஸ்பிரஸில்  எதிர்வினை ஆற்றியுள்ளார். என் வாதங்களை திசை திருப்பி திருகலாக்கும் வீண் முயற்சி அது. பிரிவினையைத் தடுக்க காந்தி இறுதிவரை முயன்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சோதனையான காலகட்டத்தில் எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்தார் நேரு....

புதுவையில் பூத்த யோக மலர்- 8

ஆச்சாரவாதிகள் எழுப்பியுள்ள புகை மூட்டத்தில் வேத உண்மைகள் மறைந்து விட்டன. புத்திசாலிகள் அந்த புகை மூட்டத்தில் உண்மையைத் தேடி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளனர். யோக சாதனைகள் மூலம் அரவிந்தர் அந்த வேதக் கருத்துக்களைக் கண்டெடுத்து, புதிய கண்ணோட்டத்தில் - உண்மையில் அதுதான் சரியான கண்ணோட்டம் - வெளிப்படுத்த முனைந்தார்.

புதுவையில் பூத்த யோக மலர்- 7

“ஆர்யா என்ற சொல் இனத்தைக் குறிப்பது அல்ல; பண்பாட்டைக் குறிப்பதாகும். ஓர் உயர்ந்த லட்சியத்தை, வாழ்வியல் நோக்கத்தை மேற்கொண்டு அதை அடைய, அக, புற வாழ்க்கையில் சில பயிற்சிகளை, பழக்கங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருபவனே ஆரியன். சுய ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் கொண்டவன். சுருக்கமாகச் சொன்னால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் அக, புற தடைகளை மீறி மேலெழுந்து வருபவன். தன்னை வெல்வதே அவனது முதல் பணி” என்று அரவிந்தர் அந்தச் சொல்லை விளக்கி உள்ளார்.

புதுவையில் பூத்த யோக மலர்- 6

தனித்தனியாக ஓடிக் கொண்டிருந்த அலக்நந்தாவும் மந்தாகினியும் ருத்ரப் பிரயாகையில் ஒன்றாக இணைந்து கங்கையாக அகன்று பிரவகிப்பது போல, அரவிந்தரும் மிர்ரா அல்பாசாவும் இணைந்து யோக சாதனை கங்கையாக உருவெடுத்தார்கள். அரவிந்தரின் வாழ்க்கையைப் போலவே அன்னையின் வாழ்க்கையும் யாவருக்கும் தெரியும்படி மேம்போக்கான வாழ்க்கையாக இல்லை. அரவிந்தரைப் போலவே அவரது வாழ்க்கையும் ஆழமும் அகவுலகம் சார்ந்ததாகவும் இருந்தது. அதுபற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

புதுவையில் பூத்த யோக மலர்- 5

மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-5...

புதுவையில் பூத்த யோகமலர்- 4

மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-4...