கசாப்புக் கடைக்காரனின் மனைவி

-பி.ஆர்.மகாதேவன்

சில சமயம், எழுத்தே ஆயுதமாக மாறும் அபாயத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது அபாயம் தானா? அல்லது, எழுத்தை ஆயுதமாக்கியவரின் மனக்குமுறலா? காந்தியத்தை நாற்சந்தியில் நிறுத்தி தர்க்கரீதியான கேள்வி எழுப்புகிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்... படியுங்கள், வரலாற்றை நினைவுகூருங்கள்!

உலகின் ஆகச் சிறந்த காந்தியவாதி கசாப்புக் கடைக்காரனின் மனைவியே.

அவள் தினமும் அதிகாலையில் கசாப்புக் கடையின் ஷட்டரைத் திறக்கும்போது, சாவிக்கொத்து கொண்டு தகரத்தில் ஆங்காங்கே தட்டி பல்லி, பூச்சிகள் இருந்தால் பாதுகாப்பான இடத்துக்குப் போகவைப்பாள். புழுதி பறந்து மற்றவர்களுக்கு மூச்சடைக்கும் என்பதால், நீர் தெளித்த பின்னே வாசல் கூட்டுவாள் (அரிசி மாவுக் கோலம் போடும் அன்பு கலந்த கலை மனது, வீட்டு வாசல் பெருக்கும்போதும் உண்டு).

கடை வாசல் பெருக்கியபின் கடைக்கு உள்ளே, ஈரத்துணியால் துடைத்துத் துடைத்து வைப்பாள்- ஒற்றைத் துளி ரத்தக் கறைகூட இல்லாதபடிக்கு. எடைக்கற்களையும் எடைத்தட்டையும் கூட எந்தத் துரும்பும் இன்றி நன்கு துடைப்பாள் நியாயஸ்தி.

மர மேடையில் இருக்கும் கத்தியை சிறு மணல் தூவி பளபளவெனத் தீட்டுவாள். பதம் பார்க்க மரத் திண்டில்தான் மெள்ள வெட்டிப் பார்ப்பாள். கூர்மை குறைவாக இருந்தால் எளிதில் அறுபடாது குரல்வளை (அப்போது அந்த உயிருக்கு வலிக்குமே). எனவே கத்தி எவ்வளவு கூர்மையாக பளபளப்பாக இருக்கிறதோ அத்தனை கருணை அவள் மனதில் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அத்தர் தெளிப்பாள்; சாம்பிராணி போடுவாள். பிண வாடை தெரியாவண்ணம் எக்சாஸ்ட் ஃபேனையும் இயக்கிவைப்பாள்.

கூண்டுக்குள் இருக்கும் கோழிகளுக்கெல்லாம் தானிய மணி தூவுவாள்; முளையில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளாட்டுக் குட்டியை உச்சி முகர்ந்து அணைத்து பசுந்தழை கட்டிவிடுவாள்.

வெட்டி வெட்டிக் களைத்த கணவனுக்கு வேண்டிய சிஷ்ருஷைகள் எல்லாம் இரவில் செய்து முடித்திருப்பாள் என்று நாசூக்காகச் சொன்னாலே புரியும்தானே?

அவள் எப்படி ஆகச் சிறந்த காந்தியவாதி என்கிறீர்களா? அவள் கையில்தான் ரத்தக் கறையே படிவதில்லையே…

அவள் அன்பைத்தானே விதைக்கிறாள்;

சிலுவைப் போர் கும்பலும் ஜிஹாத் கும்பலும் அவர்கள் உருவாக்கிய காந்தியத்துக்கு அதி அவசியமான ஹிம்சைகளைச் செய்துவிட்டதால், காந்தி எப்படி அஹிம்சாமூர்த்தியாக இருந்தாரோ அதுபோலவே கசாப்புக்கடைக்காரன் மனைவியும் கருணா மூர்த்தியாகவே இருக்கிறாள்.

பெருமாள் கோயிலை இடிக்க ஆள் நியமித்துவிட்டால், பாவச்சுமை வராமல்  ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடுவது எளிதுதானே?

இதில் இன்னொரு அத்புதம் என்னவென்றால் வெள்ளாட்டுக் குட்டியைத் திமிற விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, புடைக்கும் குரல்வளை நரம்பில் கூர்மையான பிளேடினால் சிறு கீறல் போடும்போது உச்சரிக்கவென்றே புனித மந்திரங்கள் மாலிக்கால் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. எல்லையற்ற அருளாளன் எல்லையற்ற குணவானிடம் அருளிய எல்லையற்ற அமைதி மார்க்க வசனங்கள். ஒரு புனித வசனம் கிடைத்துவிட்டால் அதன் பின் எந்தக் கொலையை வேண்டுமானாலும் எளிதில் செய்துவிட முடியும் அல்லவா?

*

பிரிவினைக் கால ரத்தக் கறை காந்தியவாதிகள் கையில் படவே இல்லைதானே?

சம்பாரன் ‘வன்முறை’யைக் கண்டு போராட்டத்தை நிறுத்தியதென்பது ஷட்டரில் சாவிக் கொத்து கொண்டு தட்டி எச்சரித்தற்கு நிகரான கருணையேதானே; ஜாலியன்வாலாபாக் பிணங்களை மறைத்தது கசாப்புக் கடையின் ரத்தத்துளிகளைத் துடைத்ததற்கு இணைதானே; பாலை மணல் கொண்டு கையடக்கக் கத்தியைப் பளபளப்பாக்கியதற்கும் புடைத்த குரல்வளையைப் புனித மந்திரம் ஓதி அறுத்தற்கும் இணை வைப்புகள் உண்டுதானே?

காந்தியைப் போன்றவரா கசாப்புக்கடைக்காரன் மனைவி..? கசாப்புக் கடைக்காரன் மனைவி போன்றவரா காந்தி?

கசாபுகள்தான் முன்னோடி. எனவே முதலில் சொன்னதை மாற்றிக் கொள்ளலாம். உலகின் ஆகச் சிறந்த கசாப்புக்கடைக்காரரின் ஆகச் சிறந்த மனைவி காந்தியே!

*

காந்தியத்தின் முதல் எதிரி காஃபிர்களைக் கொல்ல ஜிஹாத் போரில் ஈடுபடும் முஜாஹிதீன் வர்க்கம்; இரண்டாம் எதிரி முஜாஹிதீன்களை ஈன்றெடுத்து, முலையூட்டி, போஷித்து, முந்தானை விரித்து முஜாஹிதீன் ஆக்கும் வர்க்கம்.

காந்தியத்தின் அடுத்த எதிரி புறச்சமயிகளையும் உட்கிளைகளையும் கொல்ல சிலுவைப் போரில் ஈடுபடும் ரட்சணிய சேனை; அடுத்தது அவர்களை ஈன்றெடுத்து, முலையூட்டி, போஷித்து, முந்தானை விரித்து ரட்சணிய சேனையாக்கும் வர்க்கம்.

காந்தியத்தின் அடுத்த எதிரி பொலிட்பீரோ கம்யூனிஸம். உலகப் பாட்டாளிகளை ஒரே சவப்பெட்டியில் புதைக்கத் தோதாக ஓரணியில் மிரளவைக்கும் வர்க்கம்.

காந்தியத்தின் அடுத்த எதிரி கண்ட மாமிசத்தையும் தின்னும் கடைக்கோடி வர்க்கம்.

எப்படிப் பார்த்தாலும் காந்தியத்தின் எதிரி எந்நாளும் இந்துத்துவர் அல்ல. அவர் காந்தியை தெய்வமாக்கத் தன்னை சாத்தான் ஆக்கிக்கொண்டவர். போர்க்களத்தில் காயம் பட்டுத் துடிக்கும் குதிரையைக் காப்பாற்ற முடியாது என்பது தெரிந்ததும், கண்ணீர் மல்கக் கருணைக் கொலை செய்த மருத்துவரைவிடக் கருணை மிகுந்தவர்.

முடிவற்ற போரை அமைதி மார்க்கக் கடமையாக முன்வைத்தவரைவிட எல்லையற்ற அருளாளர்; அநாதைக் குழந்தைகளை ரட்சிக்கும் அன்பு உள்ளூரப் பொங்குவதால் அப்பன் ஆத்தாளைக் கொல்லும் அன்பு மார்க்க மெசையாவைவிட அதி அன்பு நிறைந்தவர் (அநாதைகளை ரட்சிக்க வேண்டுமென்றால் அவர்களை முதலில் அநாதை ஆக்கினால்தானே முடியும்).

தெரு ஓரம் நாறிச் சாகக் கிடந்தவரை தியாகத் திரு உருவாக ஆக்கியவர்.

*

கிறிஸ்தவ வன்முறைகளைக் கண்டிக்காத கிறிஸ்தவர், அந்தக் கொள்ளைக்கூட்டத்தில் ஒருவரே; இஸ்லாமிய வன்முறைகளைக் கண்டிக்காத முஸ்லிம், குற்றவாளியைத் தண்டிக்காத காவலரே.

தீவிரவாதத்தைக் கண்டிக்காதவர் தீவிரவாதியே. கசாப்புக்காரனின் மனைவி கசாப்புக்காரியே.

*

மதப் பிரசாரத்துக்கு சட்ட பூர்வ அனுமதி உண்டு. ஆசைகாட்டி மதம் மாற்றினேன் என்று மாற்றியவர் சொன்னாலோ ஆசைகாட்டப்பட்டு மதம் மாறினேன் என்று மாறியவர் சொன்னாலோ மட்டும் நிச்சயம் கடும் தண்டனை உண்டு.

கேள்விப்பட்டிருப்பீர்களே… நான் ஆசைகாட்டி கட்டிலில் விழவைத்தேன் என்றோ நான் மயங்கி கட்டிலில் விழுந்தேன் என்றோ ஒப்புக்கொண்டால் கடும் தண்டனை உண்டு.

பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் விபச்சாரம், விபச்சாரமே அல்ல. சட்ட பூர்வ அங்கீரத்துடன் நடக்கும் விபச்சாரம் ஒரு தொழில் மாத்திரமே. அதற்கு வருமானமும் உண்டு; வரி கிடையாது.

*

சுதந்திரத்துக்கு யார் காரணமோ, பிரிவினைக்கும் அவரே காரணம்.

ஜாலியன் வாலாபாகைத் தொடர்ந்து இந்தியர் ஆயுதத்தைக் கையில் எடுத்திருந்தால்..? பிரிட்டிஷார் கூடுதல் துப்பாகிகளைக் கையில் எடுத்திருப்பான்; கூடுதல் பீரங்கிகளை வெளியேற முடியாதபடி வாசலில் நிறுத்தியிருப்பான். கூடுதல் இந்துக்கள் கொல்லப்பட்டிருந்தால், கூடுதல் இந்துக்கள் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள்.

சிறு பனிக்கட்டி உருண்டு உருண்டு பெரும் பனிபாறை ஆகியிருக்கும்; சிறு ரத்த ஊற்று கொப்பளித்துக் கொப்பளித்துக் குருதிப்புனலாகியிருக்கும்.

அத்தனை ஜாதி இந்துவும் கொல்லப்பட்டிருந்தால், அத்தனை ஜாதி இந்துவும் ஓரணியில் திரண்டிருப்பார்கள் (எந்தப் பிளவுபடுத்தலும் அதை வீழ்த்தியிருக்காது).

அத்தனை இந்தியரும் கொல்லப்பட்டிருந்தால், இந்து – முஸ்லிம் ஒற்றுமை அதுவாகவே பலப்பட்டிருக்கும் (எந்த அப்பீஸ்மென்டும் தேவைப்பட்டிருக்காது).

ஆம், ஆயிரக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்; நூற்றுக்கணக்கில் இஸ்லாமியர் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட பிரிவினை தவிர்க்கப்பட்டிருக்கும்.

பதிலடி தரத் தொடங்கிய பின் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷாரால் கோடிக்கணக்கான இந்தியர்களை எத்தனை காலம்தான் கொன்று குவித்திருக்கமுடியும்? ஒரு சிராய்ப்புகூடப் படாமல் அத்தனை செல்வங்களுடன், அத்தனை வைப்பாட்டிகளுடன், அத்தனை நாய்க்குட்டிகளுடன், அத்தனை பூச்செடிகளுடன், அலுங்காமல் குலுங்காமல் கப்பல் ஏறிச் சென்ற பிரிட்டிஷ் கும்பல், கதறித் துடித்தபடி ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள்.

அது அவர்களுக்கு நடக்கவில்லை என்பதால், நடந்ததெல்லாம் அவர்கள் கை காட்டியபடிதான் என்றே அர்த்தம்.

அஹிம்சை போதனைகள் கேட்டு(ம்) ஆங்கிலேயர் துப்பாக்கியைக் கீழேபோடவில்லை. பாகிஸ்தானியர் வாளைக் கீழே போடவில்லை; இறுதியாக சீக்கியர் எடுத்த வாளையும் இந்துத்துவரே கீழே போடவைத்தார்.

ஒரு கொலையால் யாருக்கு அதிக நன்மையோ அவரே கொன்றிருப்பார். ஒரு கொள்கையால் யாருக்கு அதிகப் பலனோ அவரே அதை வடிவமைத்திருப்பார்.

காந்தியம், பிரிட்டிஷுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முடக்கியது. இஸ்லாமியருக்கு எதிரான ஆயுதப் பதிலடியை முடக்கியது.

பெரும்பான்மை ஆயுதம் ஏந்தினால் மட்டுமா பேரழிவு? சிறுபான்மை ஆயுதம் ஏந்தினாலும் பேரழிவுதான்.

ஆயுதப் போருக்குப் பின் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், மேலும் ஆயுதப் போரையே கொண்டுவருமாம்.

நம் வரலாறு அப்படிச் சொல்லவில்லை. ஒளரங்கசீபை விரட்டியடிக்க ஆயுதம் ஏந்தினார் சத்ரபதி சிவாஜி. அதன் பின் வந்த அஹல்யாபாய் ஆயுதம் ஏந்தவில்லை; அன்பின் விளக்கையே ஏந்தினார்.

பதிலுக்கு ஜஸியா விதிக்கவில்லை; பதிலுக்கு மசூதியை இடிக்கவில்லை. இடிபட்ட கோயிலைக்கூட இஸ்லாமியர் மனம் புண்படாமல்தான் புனரமைத்தார். நந்தியைக் கூட நகர்த்தியிருக்கவில்லை.

இந்துப் பெரும்பான்மையின் ஆன்மா எல்லாரையும் அரவணைப்பதே… இந்துத்துவ ஆதிக்கம் என்பது அதிகாரப் பரவலாக்கமே.

இந்து தெய்வங்களின் கையில் இருந்த ஆயுதங்கள் அரக்கர்களைக் கொல்ல மட்டுமே. ஆப்ரஹாமிய சாத்தான்களைப் போல அவரல்லாதவர்களையெல்லாம் அழிக்க அல்ல.

தெரிந்திருந்தும் இந்துவை அடக்குகிறேன் என்று ஆயுதங்களைப் பிடுங்கிப் போட்டு அடிவாங்க வைத்தார்.

புரிகிறதா, இந்துவின் ஆயுதத்தைக் கீழே போடச் சொன்னார்; இந்துக்கள் அல்லாதவர் அந்த ஆயுதத்தையும் சேர்த்து எடுத்துக் கொன்றான்கள்.

இந்தியாவில் இந்துப் பெரும்பான்மை இருந்த 500 சமஸ்தானங்களில் மதம் மாற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒருவருக்குக் கூட ஒரு சிறிது காயம் கூடப் படவில்லை. பாகிஸ்தானின் 50 காலிஃபேட்களில் மதம் மாற மறுத்த ஒற்றை இந்து கூட ஓடி ஒளியாமல் உயிருடன் இருக்க முடியவில்லை.

என்றைக்காவது எந்த காந்திய குண்டனாவது இந்த இந்து தர்ம நல்லிணக்கத்தைப் புகழ்ந்ததுண்டா..?

அற்பமாக இருக்கும்  ‘தீண்டாமை’க்கு அடிவயிற்றிலிருந்து கத்துவான்கள்; ஆப்ரஹாமியருடனான மதப் போரில் அடிபடும் இந்துப் பக்கம் இருக்கும் நியாயத்தை அணு அளவும் பேச மாட்டான்கள்.

காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கண்மூடித் தனமாகக் கொன்றான்கள் கையில் கிடைத்த சித்பவன் பிராமணர்களையெல்லாம். ஒரே ஒரு காந்திய ரெளடி ஒரே ஒரு மலர் வைத்து, ஒரே ஒரு அஞ்சலி செலுத்தியதைக் காட்டுங்கள்.

கோ ரட்சகர், சமஸ்கிருத ஆராதகர், ராம பக்தர், கிராம ராஜ்ஜியம், சுதேசி, எளிமை, லஞ்ச ஊழலற்ற நேர்மை, நல்லிணக்க அரசியல் அத்தனை இந்து நற்குணங்கள் இருந்தும் அதீத அப்பீஸ்மெண்டினால் அம்பலப்பட்டு, அபாயகரமாகிப் போனவர்.

நல்லிணக்கப் புறாக்களெல்லாம் கழுத்தறுபட்டுக் கண்முன்னே துடிப்பது கண்ட பின்னரும் அமைதித் தூதுகளை நிறுத்தவே இல்லை.

இஸ்லாமிய நல்லிணக்கம் என்பது வேறு; இஸ்லாமிய அடிப்படைவாத அப்பீஸ்மென்ட் என்பது வேறு.

காந்தி படிக்காத ஒரே பாடம்: இஸ்லாமியரை நேசி; ஜிஹாதை வெறு; இந்துக்களைப் படிக்கவிடாத ஒரே பாடம்: கிறிஸ்தவரை நேசி; மத மாற்றத்தைத் தடு.

தனக்குப் பிடிக்காத பாடங்களை மாணவர்களையும் படிக்கவிடாமல் தடுத்த ஆசிரியர். தானும் குழிக்குள் விழுந்து தன்னை நம்பியவர்களையும் விழவைத்தவர்.

தேசம் மீண்டுவிட்டதுபோலத் தோன்றுகிறதா..?

பாரதம் இருக்கும்; பாரதமாக இருக்காது. இந்துக்கள் இருப்பார்கள்; இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.

மரபணு மாற்றப்பட்ட பின் இருப்பது மரபானது அல்ல.

*

உள்ளூரிலேயே ஊர் பேர் தெரியாத காந்தியை இன்னொரு கண்டத்துக்கு இஸ்லாமியர் அழைத்தது ஏன்? சமண வேர்களும்கொண்டவர் அஹிம்சையைக் கற்றுக்கொள்ள அந்நிய நாட்டு டால்ஸ்டாயா கிடைத்தார்?

சூத்ரதாரியின் சுண்டுவிரல் அசைவுகளுக்கு ஏற்பத்தான் ஆட முடியும், பொம்மைகளால்.

மக்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கியதற்கு மகாத்மா பட்டம்; மதவாதத்தை எதிர்க்கிறேன் என்று மங்கல் மூர்த்தியின் மராட்டிய ஊர்வலத்துக்குத் தடை. மகமதியரைச் சேர்த்துக் கொள்கிறேன் என்று காலிஃபேட்டுக்கு ஆதரவு.

இந்து ஒற்றுமை என்ற பெயரில் ஹரிஜன் – ஹரிஜன் அல்லாதவர் என்று பிளவு; முஸ்லிம் நல்லிணக்கம் என்ற போர்வையில் அடிப்படைவாத ஜின்னாயிஸத்துக்கு ஆதரவு.

*

முதலையின் முதுகில் அமர்ந்திருக்கும் குரங்கு, ஆற்றின் நடுப்பகுதிவரை முங்காமல் ஜம்மென்று வந்துவிட்டது.

மெள்ள முதலை நீருக்குள் முங்குகிறது. குரங்கின் கால் நனையும் முதலில்… முட்டு நனையும் அதன் பின். இடுப்பு முங்கும்; மார்பு முங்கும்; தோள் முங்கும்… அதன் பின் முதலை தன் கூர் பற்கள் நிரம்பிய வாயைத் திறந்து இங்கு பத்திரமாக உட்கார்ந்துகொள் என்று சொல்லும்.

குரங்குக்கு ஒரே கொண்டாட்டம் தான் இல்லையா.

எதுவுமே நடக்கவில்லையே… என்ன நடந்தாலும் காப்பாற்ற எப்பேற்பட்ட நண்பர் அருகிலேயே இருக்கிறார்… இல்லையா?

ஆப்ரஹாமிய முதலையின் முதுகில் அமர்ந்திருக்கும் தேசம் அதி பத்திரமாகவே இருக்கிறது.

பாரத் மாதாகி ஜே… வாழ்க காந்தி மஹ்ஹான்!

$$$

Leave a comment