-சுப்பு, பத்மன், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது நான்காம் பகுதி…

16. வைரமுத்துவும் சாஸ்திரமும்
-சுப்பு
சென்னையில் நடந்த கம்பர் விழாவில் ராமபிரானைப் பற்றி வைரமுத்து பேசியதற்கு எதிர்ப்பாக அங்கங்கே சில குரல்கள் ஒலிக்கின்றன. அதே மேடையிலேயே இலங்கை ஜெயராஜ் அந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார். இலங்கைக்காரருடைய நூல் பயிற்சியும் மேதைமையும் சொல்லாற்றலும் நாமனைவரும் அறிந்ததே. ஆனால் எனக்கு மட்டும் கொஞ்சம் இடிக்கிறது.
வைரமுத்துவைக் கண்டிப்பதற்கு முன்பு அவருடைய கவியாற்றலைப் புகழ்ந்து பேசுகிறார். இந்த நாகரீகம் தேவையா என்பதுதான் நம்முடைய ஐயப்பாடு. கருத்துப் போர் நடக்கும்போது கண்ணியம் அவசியம் என்கிற வழிகாட்டுதல் நமக்கு மட்டும்தானா, கழகத்தவற்கு கிடையாதா? எதிராளி கடைப்பிடிக்காத ஒழுக்கத்தை நாம் ஏன் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்?
இரண்டாம் பானிபட் போர் என்று நினைக்கிறேன். யமுனை நதியின் வடக்குப் பகுதியில் முகலாய படை தெற்கு கரையில் இந்திய மன்னர்கள். மறுநாள் போர் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு காற்றில் கலந்திருந்தது. இரவு நேரத்தில் நதியைக் கடக்கக் கூடாது என்பது சாஸ்திரம். இந்தியப் படைகள் அந்த அடிப்படையில் உண்பது, உறங்குவது என்கிற ஸ்திதியில் இருந்தன.
முகலாயனுக்கு சாஸ்திரம் தெரியாது. அவன் இரவோடிரவாக நதியைக் கடந்துவந்து நம் ஆட்களை போட்டுத் தள்ளிவிட்டான். ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் சில பாடங்களை நாம் படிக்கவில்லை என்பது கம்பர் விழாவின் நீதியாகும்.
- ஈ.வெ.ராவோ அவருடைய சித்தாந்தக்காரர்களோ ஹிந்துக் கடவுளையும் நம்முடைய சநாதன தர்மத்தையும் கண்டிக்கும்போது கண்ணியமாக பேசியிருப்பார்களா?
- ஏதாவது இடத்தில், வாதத்தில் நாகரிகமாகப் பேசி வெற்றியடைந்திருப்பார்களா?
- தனிப்பட்ட தாக்குதல், அங்கங்களை இழிவு செய்தல், பிறப்பு குறித்து ஆய்வு -இவையில்லாமல் திராவிட வாதம் செயல்பட்டதுண்டா?
நிலைமை இப்படியிருக்கையில், நமக்கு மட்டும் ஏன் நாகரிகம் என்பதுதான் என் கேள்வி.
இதை எழுதும்போது எட்டிப் பார்த்த நண்பர் வெங்கட் சொல்கிறார்: சார் அது ETE Syndrome. அதாவது Eulogising The Enemy Syndrome.
- திரு. ‘திராவிட மாயை’ சுப்பு, மூத்த எழுத்தாளர்.
$$$
17. திசையுணர்ந்து திருந்திவிடு!
-பத்மன்
கரிதானே வைரமாகும்?
கரித்தானும் வைரமாமோ?
உரந்தானே வைரமாகும்?
உளறுவோனும் வைரமாமோ?
கூர்மைதானே வைரமாகும்?
கூறுகெட்டோன் வைரமாமோ?
தரந்தானே வைரமாகும்?
தரங்கெட்டோன் வைரமாமோ?
மழைத்துளியே முத்தாகும்!
மலத்துளியும் முத்தாமோ?
சிப்பிக்குள் முத்தாகும்!
சிறுமதியும் முத்தாமோ?
வெண்மையே முத்தாகும்!
வஞ்சகமும் முத்தாமோ?
தூய்மையே முத்தாகும்!
துர்குணமும் முத்தாமோ?
வைரமென்றும் முத்தென்றும்
பெயர்வைத்தால் போதாது;
வரமான வாழ்க்கையிதை
வளர்த்தெடுக்க வேண்டாமோ?
மானுடத்தை மேம்படுத்த
மண்ணுலகில் தானுதித்த
மாதவனைத் தூற்றுவது
மாசுபட்ட நெஞ்சன்றோ?
தன்னைத்தான் ஞானியென்று
தருக்குடனே திரியாமல்
உண்மையாய் தமிழதனை
உருப்படியாய் படித்திடுக!
திரைப்பாடல் கிறுக்கிவிட்டுத்
திரைமறைவில் குறும்புசெய்யும்
‘திகைப்ப’றியாத் திறனிலானே,
திசையுணர்ந்து திருந்திவிடு!
- திரு. பத்மன் என்கிற நா.அனந்தபத்மநாபன், மூத்த பத்திரிகையாளர்.
$$$
18. நாயகர்களை இகழவா இலக்கிய நிகழ்ச்சிகள்?
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
சென்னையில் நடைபெற்ர கம்பன் கழக ஆண்டுவிழாவின் நிறைவுநாளில், கவிஞர் வைரமுத்துவின் கபடப் பேச்சுக்கு நாகரிகமாகப் பதிலடி கொடுத்து தமிழர்களின் அவமானத்தை சிறிது துடைத்தார் இலங்கையிலிருந்து வந்த கம்பதாசரான கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ். அவருக்கு இருக்கும் கம்பன் மீதான நேசமும் ராமபக்தியும் நம்மவர்களிடம் இல்லையே என்பதுதான் நமது கவலை. இதோ அவரது பேச்சின் காணொளிப் பதிவு.
$$$
ஐயா வணக்கம்
உங்களின் கேள்விகள் மிக மிக துல்லியமான சான்றான்மையுடன் கேட்கப்பட்ட ஒன்று.
கவிப்பேரரசு என்று தன்னை மிகைப்படுத்திக் கொள்ளும் ஒருவர் உங்களின் பதிவை படித்தவுடன் உணர்வுபூர்வமாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த மனிதரிடம் அதை எதிர்பார்ப்பது முற்றிலும் தவறானது.
மேலும் இது போன்ற புனித நிகழ்ச்சிகளுக்கு இந்த மனிதரை அழைத்த சென்னை கம்பன் கழக அமைப்பாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய தலைகுனிவு.
ஐம்பது ஆண்டுகள் திறமையுடன் பொலிவுடன் கம்பனின் மாண்பை அறத்தை அன்பை சகோதரத்துவத்தை பாரதத்தின் பண்பை தமிழ் இலக்கியத்தின் வளமையை சென்னை கம்பன் கழகம் வெளிப்படுத்தி காட்டியுள்ளது.
அதற்கு இந்த நிகழ்வு ஒரு கரும்புள்ளி என்றே கருதப்பட வேண்டும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில் இனிமேல் இது போன்ற மிருகங்களை நல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது. எந்த மாதிரியான அரசியல் சூழலுக்கும் நாம் அடி பணிந்து விட கூடாது. நன்றி ஐயா.
LikeLike