சுதந்திரம் காக்கும் கொங்குநாடு

இந்தக் கட்டுரையின் அடிநாதம், நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் எவ்வாறு ஒருங்கிணைந்த பாரத அன்னையின் விலங்கொடிக்க முன்னிலையில் நின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது தான். அது  மட்டுமல்ல, தமிழகத்தின்  ஓர் அங்கமான கொங்குநாடு அந்த மூவரையும் எவ்வாறு அரவணைத்தது என்பதை சுட்டிக்காட்டி, நாட்டின் மனக்குரலாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை எடுத்துக் காட்டுவதும் நமது நோக்கம்.