-காலச்சக்கரம் நரசிம்மா, மு.சந்திரன், பி.ஏ.கிருஷ்ணன், டி.கே.எல்.ஸ்ரீராம்
‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று நான்கு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசுக்காகக் காத்திருப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன…. (பகுதி-2)

6. நீர்த் தேக்கம் தான் பிரச்னை!
-காலச்சக்கரம் நரசிம்மா
2018இ ல் வீசிய கஜா புயல் மிக்ஜாம் புயலைவிட பயங்கரம்.
இப்போது, வெறும் நீர்தேக்கம்தான் பிரச்னை.
2023இல் எங்கள் ஏரியாவில் என் வீட்டு மெயின் வாசல்படி வரை வெள்ளம்.
2015இல் வெள்ளத்தால், வீட்டிலிருந்து வெளியேறினோம். ஆனால், 2018 கஜாப்புயலில் வெள்ளம் கேட்டை தாண்டி உள்ளே வரவில்லை.
இந்த முறை வீட்டு மெயின் வாசற்படி அளவு வந்து விட்டது.
நம்ப மாட்டீர்கள். வாசல்படியில ஒரு லட்சுமண ரேகையைக் கிழித்து, தாண்டி வராதே என்று சொன்னேன். வெள்ளம் என்ன அரசியல்வாதியா, சத்தியத்துக்குக் கட்டுப்படாமல் இருக்க..?
மெயின் வாசற்படியை தாண்டி உள்ளே வரவில்லை.
பல ஜீவராசிகள் உள்ளே வர முயற்சி செய்து, ஆதார் கார்ட் இல்லாததால உள்ளே அனுமதிக்கவில்லை.
சம்ப்-பில் drainage தண்ணீர் கலந்ததால் உபயோகிக்க முடியாது. க்ளீன் செய்து வாஷ் பண்ண வேண்டும்.
இதுவரையில் ஒரு கார்ப்பரேஷன் நபர், எம்எல்ஏ, கவுன்சிலர் யாரும் வரவில்லை- என் தெருவுக்கு அல்ல, எங்கள் ஏரியாவுக்கே.
2018 இல் எடப்பாடி ஆட்சியில் கஜா புயல் அடிக்க போகிறது என்று அரசு இரண்டு நாள் முன்பாகவே எச்சரிக்கை விடுத்ததால், தி ஹிந்து ஆபிஸ் பக்கத்தில் அண்ணா சிலை எதிரே, பிரியதர்ஷனி பார்க் என்கிற ஹோட்டலில் மூன்று நாள் தங்கினேன்.
இப்போதைய நிலையை விட அப்போது சேதம் அதிகம். மூன்று மாவட்டங்கள் காலி. 18,000 ஹெக்டேர் பயிர்கள் அவுட். எல்லா மின் கம்பங்களும் பெயர்ந்து விழுந்தன.
இருந்தாலும் எட்டுவழிக்காரர், ஒரே நாளில் மின்சாரம் கொடுத்தார். பால் நிறையக் கிடைத்தது.
இப்போது புயல் சேதம் அந்த அளவுக்கு இல்லை. வெறும் தண்ணீர்த் தேக்கம்தான். ஆனாலும் ஐந்து நாளாகியும் normality வரவில்லை.
இப்போது எட்டுவழி விடுங்க, ஒரு வழி கூட தெரியவில்லை.
***
அனுபவி ராஜா அனுபவி
முட்டுக் கொடுக்க வாரீயளா!
தட்டிக் கொடுக்க வாரீ...யளா..!
வடியல் பணி பேஷ் பேஷ்னு
சொன்னால் மாமா,
டிவிக்கு பேட்டி எடுப்போம்!
லுங்கிக்குப் பதிலா, வேட்டி கட்டிகிடடு,
துண்ணூறு பூசிக்கோங்கோ!
பூணூலும், ருத்திராட்சக் கொட்டையையும் மாட்டிகிட்டு,
கேமரா முன்னே வாங்கோ..!
முட்டுக் கொடுக்க வாரீயளா...
தட்டிக் கொடுக்க வாரீயளா.
அம்மா ஆட்சியில், கஜா வந்தப்ப,
ஜகா வாங்கியத பேசுங்க.
விடியல் ஆட்சில மிக்ஜாம் வந்தப்ப,
பிரட் ஜாம் தந்தானு உருட்டுங்க.
முட்டுக் கொடுக்க வாரியளா
தட்டிக் கொடுக்க வாரியளா..
- திரு. காலச்சக்கரம் நரசிம்மா, மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர். இது இவரது முகநூல் பதிவு.
$$$
7. காணாமல் போன ஏரிகள்
-ஒரு சமூக ஊடகப் பதிவு
பழைய சென்னை வட்டாரத்தில் இருந்த நீர்நிலைகளில் 96 % சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை. இதில், சென்னையைச் சுற்றி இருந்த ஏரிகள் கணக்கில் எடுக்கப்படவில்லை.
கீழே உள்ள ஏரிகளின் பட்டியலில் ஒரே ஒரு ஏரியாவது, இப்போது இருக்கிரதா என்று சொல்லுங்கள், பார்ப்போம்.
1. நுங்கம்பாக்கம் ஏரி (தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2. தேனாம்பேட்டை ஏரி,
3. வியாசர்பாடி ஏரி,
4. முகப்பேர் ஏரி,
5. திருவேற்காடு ஏரி,
6. ஓட்டேரி,
7. மேடவாக்கம் ஏரி,
8. பள்ளிக்கரணை ஏரி,
9. போரூர் ஏரி,
10. ஆவடி ஏரி,
11. கொளத்தூர் ஏரி,
12. இரட்டை ஏரி (பெயரளவில் இருக்கிறது)
13. வேளச்சேரி ஏரி (100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்)
14. பெரும்பாக்கம் ஏரி,
15. பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர், பேருந்து நிலையமே இங்கு தான் அமைகிறது),
16. கல்லுக் குட்டை ஏரி,
17. வில்லிவாக்கம் ஏரி,
18. பாடியநல்லூர் ஏரி,
19. வேம்பாக்கம் ஏரி,
20. பிச்சாட்டூர் ஏரி,
21. திருநின்றவூர் ஏரி,
22. பாக்கம் ஏரி,
23. விச்சூர் ஏரி,
24. முடிச்சூர் ஏரி (முடிச்சூர் ஏன் தத்தளிக்கிறது என்று தெரிகிறதா?)
24. சேத்துப்பட்டு ஏரி (ஸ்பர் டாங்க் – ஸ்பர்டாங்க் ரோடு),
25. செம்பாக்கம் ஏரி,
26. சிட்லபாக்கம் ஏரி ,
27. போரூர் ஏரி
28. மாம்பலம் ஏரி (இங்கு லேக் வியூ ரோடு மட்டும் உள்ளது).
29. கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளங்கள்.
32. ஆலப்பாக்கம் ஏரி,
33. வேப்பேரி,
34. விருகம்பாக்கம் ஏரி
(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
35. கோயம்பேடு சுழல் ஏரி (கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவி இங்கு தான் உள்ளன)
36. அல்லிக் குளம் ஏரி (நேரு ஸ்டேடியமே தான்)
-இந்தப் பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சித் தகவல்களைச் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
1906-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன.
2013இல் எடுத்த கணக்கீட்டின்படி , 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன.
இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை.
- நன்றி: தமிழ் உலகம்
$$$
8. தேவை புதிய ஆலோசனை!
-மு.சந்திரன்
வெள்ள ஆயத்தப் பணிகளுக்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு. திருப்புகழின் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டதாக திமுகவினர் தற்போது கூறுகின்றனர். அவர் கூறிய ஆலோசனைகள் கேட்கப்பட்டதா என்பதே இன்றைய கேள்வி.
திருப்புகழ் ஐஏஎஸ் இடம் பேட்டி எடுத்து, திமுக செய்த தவறை வெளிக்கொண்டு வர வேண்டும். (ஊடகத்தினர் செய்வார்களா?) அவர் 1888 சர்வே ஆஃப் இண்டியா மேப் படி வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் முதலில் முடிவெடுத்தார். அதை திமுக விரும்பவில்லை. அது தான் இன்றைய நிலைக்குக் காரணம்.
இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து சென்னை வடிகால் வாரியம் விடுபட்டால் சென்னைக்கு வெள்ள அபாயம் விலகிவிடும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் கால்வாய், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் – அத்திக்கடவு – அவிநாசி காவிரி நீர் செறிவூட்டும் திட்டம் ஆகியவை போல, சென்னையில் செய்தால் குறைந்த செலவு, பலமடங்கு பலன்.
அடையார் – காஞ்சிபுரம் , கூவம் – ராணிப்பேட்டை, பக்கிம்ஹாம் கால்வாய் –செங்கல்பட்டு, கொசஸ்தலை – திருவள்ளூர் என்று நீர் ஏற்றம் செய்து, நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்தால் இந்த 5 மாவட்டங்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் வராது. வீட்டுக்குள் வெள்ள நீர் வராது; சாலைகளில் தேங்காது.
நிலத்தடி நீரிலும் உப்புத்தன்மை குறைந்து நல்ல தண்ணீர் கிடைக்கும்.
இதைப் பற்றி ஆலோசிக்கலாமே?
- திரு. மு.சந்திரன், தமிழக பாஜகவின் தலைமை அலுவலகச் செயலாளர்.
$$$
9. தார்மிகக் கோபம்
-பி.ஏ.கிருஷ்ணன்
நம் சாதாரண மக்களுடைய பொறுமை கண்ணீரை வரவழைக்கிறது. எந்த அரசும் தங்களுக்குத் தேவைப்படும் போது கைகொடுக்கும் வாய்ப்புகள் குறைவு என்ற உணர்வோடுதான் அவர்கள் எப்போதும் இயங்குகிறார்கள்.
அதனால் அவர்களுக்கு கோபம் குறைவாகவே வருகிறது.
அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் இதுதான்: அதிமுவினருக்கு முட்டுக் கொடுப்பவர்கள் மிகவும் குறைவு. திமுகவிற்கு முட்டுக் கொடுக்கும் அரையணா அறிஞர்கள், லும்பன் கம்யூனிஸ்டுகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மிகவும் அதிகம்.
திமுகவிற்கு ஜால்ரா போடும் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்டு கட்சிகளும் தாங்கள் மனிதர்கள்தானா என்பதைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
- திரு. பி.ஏ.கிருஷ்ணன் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி; எழுத்தாளர்; இது இவரது முகநூல் பதிவு…
$$$
10. நாம் செய்யத் தவறியவை
-டி.கே.எல்.ஸ்ரீராம்
ரூ. 4000 கோடி செலவழித்தும், விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகி இருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், இதை (கீழே ஆங்கிலத்தில் உள்ளது) எல்லாம் செய்ய மறந்து விட்டது தான் வெள்ளச் சேதத்தின் முதன்மைக் காரணம். ஆனது ஆகட்டும் கிழவியைத் தூக்கி மனையில் உட்கார வை என்கிற சிந்தனை தான் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. இவ்வளவு நடந்தும் தேர்தல் அன்று 1000 அல்லது 2000 ரூபாய் கொடுத்தால் இன்று பொங்கும் மக்கள் அன்று அமைதியாகக் கடந்து சென்று வாக்களித்துவிட்டு, அடுத்த மழைக்குப் பொங்குவார்கள். இது ஓட்டுப் போடும் அறிவார்ந்த மக்கள், அவர்களது மேய்ப்பர் இருவருக்கும் நடக்கும் ஒரு புரிதல் ஒப்பந்தம்.
Constructing a proper drainage system to withstand heavy rain involves several key considerations. Here are some general guidelines to help achieve this:
1. Site Evaluation: Understand the topography and soil composition of the area where the drainage system will be built. Identify low-lying areas and natural water flow patterns to determine the best locations for drainage features.
2. Grading and Slope: Ensure that the ground is properly graded to direct water away from buildings and towards the drainage system. The slope should be sufficient to promote water flow but not excessively steep, to prevent erosion.
3. Gutters and Downspouts: Install gutters and downspouts on buildings to collect and direct rainwater away from the foundation. Ensure that downspouts discharge water a safe distance from the building and into the drainage system.
4. French Drains: Consider installing French drains in areas prone to water accumulation. These consist of a perforated pipe surrounded by gravel, which helps to collect and redirect groundwater.
5. Surface Drainage: Use surface features such as swales, berms, and channels to direct surface water flow towards designated drainage points. These can help prevent water from pooling in undesired areas.
6. Sizing and Capacity: Ensure that the drainage system is designed to handle the expected volume of water during heavy rain events. This involves calculating the required capacity of pipes, culverts, and other drainage elements.
7. Quality Materials: Use durable, corrosion-resistant materials for the drainage system to ensure longevity and minimal maintenance. Properly size and install pipes and culverts to prevent blockages.
8. Maintenance: Regularly inspect and maintain the drainage system to remove debris, silt, and other obstructions that can impede water flow.
9. Local Regulations: Comply with local building codes and regulations governing drainage design and construction.
10. Professional Assistance: For complex projects or in areas with challenging terrain, consider consulting with a civil engineer or drainage specialist to ensure the most effective design and construction.
By carefully considering these factors and designing the drainage system accordingly, you can create a robust infrastructure capable of effectively managing heavy rain and minimizing the risk of water damage.
***
அரசியலைத் தாண்டி ஒரு நிஜம் யாதெனில், நம் மக்களின் கான்கிரீட் காடுகளின் மீதான தீராத காதல்; வெறித்தனம் என்றே சொல்லலாம். முன்பு எல்லாம் பிழைக்க மட்டும் தான் பெருநகரத்திற்குச் செல்வார்கள். 58 வயது ஆகி ரிடையர்மென்ட் ஆகிவிட்டால், மகன், மகளுக்கு திருமணம் முடித்து வைத்து விட்டு அவரவர் தங்கள் சொந்த இடத்திற்கு கிராமத்துக்கு சென்று விடுவார்கள்.
காஞ்சிப் பெரியவர் கூட, எல்லோராலும் முடியவில்லை என்றாலும் பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம் ஒரு விண்ணப்பம் போல வைத்தார், அதாவது ‘சொந்தக் கிராமத்துக்குச் செல்லுங்கள், கோயில், குளம், வேதம், ஆன்மிகம் என்று செலவழியுங்கள்’ என்று சொன்னார். பலர் கேட்பதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் கிழடு கட்டைகள் கூட 70 வயதுக்கு மேல் சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்வது தான் கைலாசத்துக்கு நிகர் அனுபவம் என்று நினைக்கிறார்கள்.
எனது நண்பர் தஞ்சை மாவட்டக் கிராமங்களுக்கு மாதம் ஒரு முறையாவது செல்வார். ‘ஊரே வெறிச்சோடி இருக்கிறது. யாருமே இல்லை’ என்று புலம்பித் தவிப்பார். இருப்பினும் அங்கு வீடு கட்டுகிறார். நேற்று இரவு போனில் பேசும் போது கூட இந்த முறை மிக திடமாக முடிவு எடுத்து விட்டதாகவும், அவரது குடும்பத்தில் பலர் இது போன்ற முடிவை எடுத்து விட்டதாகவும் சொன்னார்.
அந்த அளவிற்கு இயற்கை மனிதப் பேராசைக்கு பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. பை தி வே நானும் அப்படித்தான், அதிகபட்சம் ஒரு 5 வருடம் சென்னை வாழ்க்கை. பார்ப்போம். காலத்தின் கைகளில் எல்லாம்.
- திரு. டி.கே.எல்.ஸ்ரீராம், தொழில்நிமித்தமாக சென்னையில் வசிக்கும் கும்பகோணத்துக்காரர். இது இவரது முகநூல் பதிவு.
$$$