இருமையின் இறைவன்

இன்பமும் துன்பமும் இறைவன் தருவது. அவனது நினைவே அமைதி அளிக்கிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுவதும் இது தானே?

இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை

20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புது மனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, ‘இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை’ என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கத்தின் ஸாரம் இது...

ஒருவன் வாளி

தியாகராஜர் “ஒக்க மாடமு ஒக்க பாணமு, ஓக்க பத்தினி வ்ரதுடே” என்ற ஹரி காம்போஜி  ராக கீர்த்தனையை அழகாக கம்பீரமாக பாடியிருக்கிறார். “ஒரு சொல், ஒரு வில், ஒரு பத்தினி என்ற கொள்கை கொண்டவன் ராமன், அவனை மறவாதே என்று”...

எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்!

எழுதியது யார் என்று தெரியவில்லை. எல்லா ஜீவராசிகளையும் வாழ்த்தி அரவணைக்கும் சனாதன அன்பு வெள்ளத்தில் திளைத்த பலரும் பலகாலமாக உச்சரிக்கும் மந்திரம் இது.  இதுவே பாரதபூமியின் பண்பாடு.

யேசு கிருஸ்துவின் வார்த்தை

தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். 'தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக் கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்' என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன்.

ஓம் சக்தி

எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ்கிறோம். செத்த பிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ? கடவுளுக்குத் தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது, சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம், ஐயோ பாவம்!