திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவோம்!

நமது முன்னோரை அவர்களது நினைவிற்குரிய திருநாட்களில் நினைவுகூர்வதும் வணங்கி மகிழ்வதும் மரபு. அந்த அடிப்படையில், வைகாசி விசாகமான இன்று திருவள்ளுவரைப் போற்றி மகிழ்கிறோம். இந்நாளில் வைகாசி அனுஷமே திருவள்ளுவர் நாள் என்று, 1931-இல் கூடி உறுதி செய்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு நன்றி கூறுகிறோம். இன்று தமிழகம் எங்கும் தேசிய, தெய்வீக நம்பிக்கை மிக்கவர்களால் திருவள்ளுவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வெளியிடுகிறோம்…

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 5

இளமை நிலையாமை, யாக்கை (உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் மணிமேகலை காப்பியம் அழுத்தமாகக் கூறுகிறது. பௌத்த சமயத்தின் ஆணிவேரான துறவையும் தொண்டையும் போற்றிப் பரவுகிறது இக்காப்பியம். என்றபோதும் மன்னனின் செங்கோல் உயர்வை காப்பியம் ஆங்காங்கே முன்வைப்பது, செங்கோல் வீழின் துறவும் நிலையாது என்பதால் தான்.