தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 1

இந்தியா சுதந்திரம் பெற்றபோது 1947 ஆகஸ்ட் 14-இல் திருவாவடுதுறை ஆதீனத்தால் நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று (28.05.2023) தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்படுகிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. இதனையொட்டி, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செங்கோல் குறித்த பதிவுகளைக் காண்போம்...

வேணு முதலி

வேதபுரம்‌ என்று புதுவை நகரத்துக்கு ஒரு மாற்றுப்‌ பெயர்‌ உண்டு. பாரதியார்‌ வேதபுரம்‌ என்ற பெயரைப்‌ பல இடங்களில்‌ உபயோகித்துளளார்‌. வேணு முதலி என்ற நபரைப்‌ பற்றியும்‌ பல கதை, கட்டுரைகளில்‌ குறிப்பிடுகிறார்‌. இக்‌ கதை ‘சுதேசமித்திரனில்’ முதலில்‌ வெளிவந்தது; ‘காளிதாசன் எழுதுகிறார்’ என்ற குறிப்புடன் இக்கதை வெளியாகி இருக்கிறது. பிறகு மித்திரன்‌ அலுவலகம்‌ 1920-ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலில்‌ வெளியாயிற்று.

அவதாரம்

அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...