பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 6)

கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேண வேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

மார்க்ஸின் சித்தாந்தமும் விவேகானந்தரின் வேதாந்தமும்!

பூஜ்யஸ்ரீ சுவாமி பஜனானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி; பேலூரில் உள்ள மடத்தின் தலைமையகத்தில் உள்ளார்.  ராமகிருஷ்ண இயக்கத்தின் மூத்த அறங்காவலர்களுள் ஒருவர்; ‘பிரபுத்த பாரத’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்; சிறந்த சிந்தனையாளர்; எழுத்தாளர்; பல நூல்களை எழுதி இருக்கிறார். அன்னாரது கட்டுரை இங்கே...