‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி. இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது.