கோவையைச் சார்ந்த அமரர் திரு. சி.கே.சுப்பிரமணிய முதலியார் சைவம் போற்றிய சான்றோர். அவர் 1953ஆம் ஆண்டு கண்ட ஓர் அருங்கனவு, இன்று மற்றோர் ஆன்மிகப் பெரியாரால் நனவாகி இருக்கிறது. அது குறித்த இனிய கட்டுரை இது....
Tag: ரெங்கையா முருகன்
மக்கள் தலைவர் வ.உ.சி.: நூல் அறிவிப்பு.
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தமிழகத்தில் சுதேசி நெருப்பைப் பற்றவைத்த தீரர் பெரியவர் வ.உ.சி. அவர்கள் குறித்த சிறிய நூலை வெளியிடும் அளப்பரும் முயற்சி குறித்த தகவல் இது... இந்நூலை வாங்கிப் பயனடைவோம்!
அறிய வேண்டிய அரிய நூல்
வேதாந்தத்தை தமிழில் வழங்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல் குறித்து அறிமுகம் செய்கிறார், நூலகரும், எழுத்தாளருமான திரு. ரெங்கையா முருகன்....
பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சுடர்விட்ட சுதேசிய எழுச்சியின் அடையாளம் தான் நெல்லைக் கலகம். அந்த வழக்கில் விடுதலைவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனைத் தீர்ப்பு (07/07/1908) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது குறித்து சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் நூலகர் திரு. ரெங்கையா முருகன் முகநூலில் எழுதிய பதிவு இது…
இனிமேலும் கழுதையென்று திட்டுவீர்களா?
சந்தோஷ மிகுதியினால் கழுதை உரத்த குரலில் வெகுதூரம் கேட்கும்படி கத்தும். கழுதைக்கு சமஸ்கிருதத்தில் ‘கர்தப, ராஸப, கர’ போன்ற பெயர்கள் காணப்படுகிறது. ‘ராஸப’ என்றால் உரத்த குரலில் சத்தம் செய்வது. ‘கர்தபகானே ஸ்ருகாலவிஸ்மய’ என்ற பழமொழிக்கு ”கழுதை சங்கீதம் பாடுகிறது. குள்ளநரி அதை ஆனந்தமாய்க் கேட்கிறது” என்று பொருள்.
தொழிற்சங்க இயக்கத்தின் முன்னத்தி ஏர்
“தனித்து நிகழ்ந்த ஒரு தொழிலாளர் புரட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தூத்துக்குடி வேலைநிறுத்தம் ஒரு முழுமையான எடுத்துக்காட்டாகும். ஈடு இணையற்ற திறமையுடனும் தைரியத்துடனும் போராடிய தூத்துக்குடி தலைவர்களையே அனைத்துப் பெருமையே சாரும்” என்று அரவிந்தரால் பாராட்டப்பட்ட போராட்டம் கோரல் மில் வேலைநிறுத்தம்...
தம்பி நான் ஏது செய்வேனடா?
பாரதிக்காக வாழ்ந்த மூவரில் தலைமகனாகக் கருதப்படுபவர் பரலி சு.நெல்லையப்பர். பாரதி பாடல்களின் நுட்பத்தை அறிந்த காரணத்தால் இந்திய மக்களிடையே பல்வேறு பத்திரிகைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளைப் பரப்பியவர் நெல்லையப்பர்.
சுவாமி சகஜானந்தரும் பெரியவர் வ.உ.சியும்
சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் நூலகராகப் பணியாற்றிவரும் திரு. ரெங்கய்யா முருகன், வ.உ.சி. ஆய்வாளரும் கூட. வ.உ.சி. மீது அளப்பரிய மரியாதை கொண்ட இவர், அவரை அழைக்கும்போதெல்லாம் பெரியவர் என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. இவரது முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது…