கிரிஷின் வாழ்க்கை நெறி தவறி, வழி தவறிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. எந்தப் பாவியும் மனதார பகவானின் நாமத்தை உச்சரித்தால், தன் தவறுகளுக்காக வருந்தி புதிய பாதையை நோக்கிப் பயணித்தால் இறைவன் தன் அன்புக் கரம் நீட்டுவார். கிரிஷ் என்றுமே கோழையாக இருந்தது இல்லை. தன் பாவச் செயல்களை ஒருபோதும் மற்றவரிடம் மறைக்கவில்லை. கள்ளங் கபடம் இன்றி வெளிப்படையாகச் சொன்னார்.
Tag: பேரா இளங்கோ ராமானுஜம்
மனம் ஒரு குரங்கு
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கிளைக்குத் தாவுவது மனத்தின் இயல்பு. இதனை துரியோதனன் பாத்திரப்படைப்பு விளக்கம் மூலமாக காட்டுகிறார் பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம்....
அனைவரையும் அறவோர் ஆக்குவோம்!
திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது பொருள் பொதிந்த கட்டுரை இது…
நினைவு முடிச்சு
போருக்குச் செல்லும் வீரனின் கரங்களில் கட்டப்படும் காப்புக்கயிறு போல, நம் வாழ்விலும் சில நினைவு முடிச்சுகள் தேவைப்படுகின்றன. இதோ நமது வாழ்வை வளப்படுத்தும் இனிய வழிகாட்டுதல் கட்டுரை. இதனை வழங்கி இருப்பவர், பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள்...
அம்பிகையின் வாளில் ரத்தம்
கொரோனா தொற்று அபாயம் நீங்கி உலகம் இப்போது வேகமாகப் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், அந்தக் கொடிய தொற்றுக்கு என்ன காரணம்? இனிமேல் அத்தகைய கொடுமை நிகழாமல் தடுப்பது எங்ஙனம்? இக்கேள்விகளுக்கு ஆன்மிகரீதியாகவும் தார்மிக ரீதியாகவும் பதில் அளிக்கிறார் பேரா. இளங்கோ ராமானுஜம்…
தன்னம்பிக்கை தரும் வேதாந்தம்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…