பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் சங்கரன்கோவில் கி.சுப்பையா அவர்கள் தனது இறை திருமகள் நிலையத்தின் வாயிலாகப் பதிப்பித்த ‘காவடிச்சிந்து: உரையும் விளக்கமும்’ என்ற நூல் அம்மகுடத்தில் பதித்த ரத்தினமாக மிளிர்கிறது.
Tag: நூல் அறிமுகம்
தென்மாவட்டங்கள் வளம் பெற… நூல் அறிமுகம்
50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் 60 ஆண்டுகளுக்கு மேலாக தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் முதுகெலும்புப் பிரச்சினையான செண்பகவல்லி அணையை சரி செய்வதற்கு தாமதப்படுத்தும் தமிழக அரசின் அலட்சியப்போக்கினை தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
விவேகானந்தம்- நூல் அறிமுகம்
2012-13இல் நடத்தப்பட்ட விவேகானந்தம்-150.காம் என்ற இணையதளத்தில் வெளியான அரிய கட்டுரைகளின் இனிய தொகுப்பு இந்நூல். சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்கும் படைப்புகள், மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் (தொகுப்பு: கவிஞர் குழலேந்தி) உள்ளன...
சுவாமிஜியும் நேதாஜியும்: நூல் அறிமுகம்
இந்திய வரலாற்றில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய இரு ஆளுமைகள் சுவாமி விவேகானந்தரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும். இவ்விருவருமே தங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கையால் இந்திய இளைஞர்களின் ஆதர்ஷமாக இன்றும் விளங்கி வருபவர்கள். இருவருமே கடல் கடந்து இந்தியாவின் பெருமிதத்தை நிலைநாட்டியவர்கள்; இருவருமே வங்காளிகள்; இருவருமே சமய நம்பிக்கை மிகுந்தவர்கள்; இருவருமே கலாச்சார தேசியத்தின் அடிப்படையில் பாரதம் ஒரே நாடு என்பதை மிகத் திண்ணமாக உறுதிப்படுத்தியவர்கள். இருவருமே மிக இளம் வயதிலேயே நம்மிடம் இருந்து விடைபெற்றுப் போனவர்கள். அதன் காரணமாகவே, இருவரும் -நிரந்தர இளைஞர்களாக – இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த வடிவமாக இன்றும் கருதப்பட்டு வருகிறார்கள்.
விடுதலைப் போரில் அரவிந்தர்- நூல் அறிமுகம்
‘பொருள் புதிது’ இணையதளத்தில் திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதிய வரலாற்றுத் தொடர் அற்புதமான நூலாகி உள்ளது. அதுகுறித்த அறிமுகம் இங்கே...
வ.வே.சு.ஐயர்: நூல் அறிமுகம்
தான் வாழ்ந்த 44 ஆண்டுக் காலத்தில், புரட்சியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, கல்வியாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த இந்த மாமனிதரின் வீர வாழ்க்கையை நூலாசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதி இருக்கிறார். பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல் இது.
பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்: நூல் மதிப்புரை
பொது யுகத்திற்கு முன்பு தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரையில் இந்தியாவில் புழங்கிய நாணயங்களைப் பற்றி - ஆங்கிலேயர்கள், பிரஞ்சு , டச்சுக்காரர்கள் வெளியிட்டு இந்தியாவில் புழங்கிய நாணயங்களைத் தவிர - ஒரு எளிய அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.
லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்
அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரம், மக்களை நேசித்த தன்மை என பல அம்சங்களிலும் ராணி அஹில்யாபாயின் ஆட்சி தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது.
ஹடயோக பிரதீபிகை – தமிழில்
பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், ஹடயோக பிரதீபிகை (2022) என்ற இந்த நூல் அருமையாக வெளிவந்திருக்கிறது.
பசும்பொன் தேவர் போற்றிய ஆர்எஸ்எஸ்: நூல் அறிமுகம்
ஆர்.எஸ்.எஸ். மீதும் வீர சாவர்க்கர் மீதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க, தி.மு.க.வினருக்கு தீராத வன்மம் உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு வீர சாவர்க்கர் மீதும் ஆர்.எஸ்.எஸ். மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ...ம.வெங்கடேசனின் நூல் குறித்த அறிமுகம்,.....
தேசப்பிரிவினை நாட்கள்: நூல் அறிமுகம்
பாகிஸ்தானில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியா வந்த ஹிந்துக்களாலும் சீக்கியர்களாலும் ‘கருப்பு தொப்பி அணிந்த தெய்வங்கள்’ என்று போற்றப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரிவினையின் போது களத்தில் நின்று நடத்திய போராட்டத்தையும் தியாகத்தையும் பற்றி விவரிக்கிறது இந்த நூல்.
நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன் – நூல் அறிமுகம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஸ்வயம்சேவகர் ஒருவர் எழுதியுள்ள நூல் குறித்த அறிமுகம் இது.
கடமையைச் செய்: நூல் அறிமுகம்
மகாகவி பாரதி தமிழுக்கு வழங்கிய அற்புதமான கருவூலம், பகவத்கீதை-தமிழாக்கம். அதனை ‘கடமையைச் செய்’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்த நூல் குறித்த அறிமுகம் இது…
ஜெய் ஸோம்நாத்: நூல் அறிமுகம்
குலபதி கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதிய ‘ஜெய் ஸோம்நாத்’ என்ற புதினம் குறித்த நூல் அறிமுகம் இங்கே...
ஹிந்துத்துவம் – ஒரு நூல் அறிமுகம்
ஹிந்துத்துவம் என்றால் என்ன? நான்கு குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதையாக இருக்கிறது, தமிழகத்தில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகளின் இது தொடர்பான புரிதல். அவர்களுக்காகவே வெளியாகியுள்ள சிறிய நூல் இது…