இதோ.... வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள, சனாதன விழிப்புணர்வு பிரசார வெளியீடு... இது பிடி.எஃப். கோப்பாக உள்ளது. இதனை அப்படியே படிக்கலாம்.
Tag: நூல்
நவகவிதை: நூல் மதிப்புரை
அரவிந்த மகரிஷியின் 150 ஜெயந்தி ஆண்டு இது. அவர் பாரதம் எழுச்சி பெற வேண்டும் என்றார். காரணம், பாரதம் உயர்வது என்றால் உலகில் நற்பண்புகள் அதிகரிக்கிறது என்பதே அர்த்தம் என்றார். கவிஞர் வ.மு.முரளியும் இதை எதிரொலிக்கிறார் ‘ஜய ஜய பவானி’ என்ற கவிதையில்: பாரதம் உயர்ந்திட, பண்புகள் ஓங்கிட... (பக்கம் 15). நவகவிதை என்றால் புதிய கவிதை என்பது மட்டுமல்ல, ஒன்பது கவிதைகள் என்றும் பொருள். நவராத்திரியை முன்னிட்டு நாளுக்கு ஒன்றென ஒன்பது நாளும் புனைந்த கவிதைகளின் தொகுப்பு இச்சிறு நூல். ...