கர்நாடக சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்துள்ளனர். அவருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இசைக்கலைஞர்கள் பலரும் துணிவுடன் முன்வந்து, ‘இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர். வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா சொற்பொழிவாளர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, பாடகர்களான திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்), சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பம், பெங்களூர் மிருதங்க இசைக் கலைஞர் அர்ஜுன் குமார் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இப்பட்டியலில் மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.
Tag: உ.வே.துஷ்யந்த் ஸ்ரீதர்
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: பதிப்புரையும் அணிந்துரையும்
நமது தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாக உள்ளது. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரை, அணிந்துரைகள் இங்கே...