‘சநாதன தர்மம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசிய பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2026 ஜனவரி 21ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு வெறுப்புப் பேச்சு; இந்து மதத்தின் மீதான ஒரு தெளிவான தாக்குதல்; இதைப் பேசிய உதயநீதிமீது வழக்கு பதியாத காவல்துறை, இந்த விஷயத்தில், எதிர்வினையாற்றிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா மீது வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல என்று தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.