தமிழ்ப் பண்பாட்டில் ‘ஏறு தழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு முதன்மையான இடமுண்டு. அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, நமது சமுதாயத்தின் வீரத்தையும், கால்நடைச் செல்வத்தின் சிறப்பையும் ஒருங்கே வலுப்படுத்துவதாகத் திகழ்கிறது.