அடல்ஜி என்னும் மாமனிதர்

வாஜ்பாயின் இனிய குரலும், கவிதை போன்ற ஹிந்தி மொழிநடையும் கேட்டு, அதனாலேயே ஜனசங்க உறுப்பினர் (பாஜகவின் முந்தைய வடிவம்) ஆனவர்கள் பலருண்டு. ஹிந்தி மொழிக்கு எதிராகப் போராடிய திமுக தலைவர் அண்ணா துரை கூட, “வாஜ்பாய் பேசும்போது ஹிந்தியும்கூட இனிக்கிறது” என்று கூறினார் என்றால், அவரது பேச்சாற்றலின் சிறப்பு புரியும்.