-மு.சந்திரன்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக, பாஜக மாநில அலுவலகச் செயலாளர் திரு. மு.சந்திரன் எழுதியுள்ள விளக்கமான கட்டுரை இது…

சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் தமிழக மாநில அரசுகள், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தத்திற்கு எதிராக ( Special Intensive Revision – SIR) எதிராக வழக்கு போடப்போவதாக கேட்டவுடன், மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்களுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
SIRக்கு எதிராக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த இடதுசாரிகள் இப்போது அமைதியாக உள்ளனர். உச்ச நீதிமன்றமே இதில் தலையிட முடியாது என்று சொல்லிய பின்னரும், இவர்கள் ஏன் இப்படி பேசுகின்றனர் என்றால், விவரம் தெரியாத முட்டாள் ஆதரவாளர்களை உசுப்பேற்றி விடுவது மட்டுமே குறி.
முதலில் SIR என்பது ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று. இதுவரை ஒரு ஃபார்மாலிட்டியாக கண்துடைப்புக்கு நடத்தி வந்தனர், இதுவரை ஆண்ட கட்சிகள். இப்போது அதிலேயே சிக்கி உள்ளனர் வசமாக. பெரும்பாலான மாநிலங்களில் கடைசியாக நடந்த SIR, 2002-03 கால கட்டத்தில்.
1) இப்போது புதிதாக SIR நடத்தப்படுகிறது. சட்டப்படி, அதுவே ஆதார வாக்காளர் பட்டியல். இதனை யாரும் எதிர்க்கவே முடியாது. நீதிமன்றம் உட்பட.
2) இதனையொட்டி, அந்த மாநில பிறப்பு – இறப்பு விகிதம், புதிதாக குடிவந்தோர் ஆகியோரை முதலில் எளிதாகப் பிரித்துவிடலாம்.
3) சந்தேகம் வந்தால், இவர்கள் அனைவரும் கட்டாயமாக தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற, ஆதாரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
உதாரணமாக பிறப்புச் சான்றிதழ், வேறு மாநிலம் அல்லது தொகுதியில் இருந்து வந்தால், முகவரி மாற்றம் எனில், அங்கே விண்ணப்பித்து மாற்றல் பெற்றார்களா, இல்லையா போன்றவற்றை நிரூபித்து ஆகவேண்டும்.
4) வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என உறுதி செய்யும் கடமை வாக்காளருக்கே. அவர்களுக்கு கட்சியினர் உதவி செய்யலாம். அல்லது நேரடியாகவே விண்ணப்பிக்கலாம். வீடு வீடாக அரசு அலுவலர்கள், BLAக்கள் வரும்போதும் உரிமை கோரலாம்.
5) Section 14(b)படி 18 வயதை கடந்த ஒவ்வொருவரும், ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் முதல் தேதியில் விண்ணப்பிக்கலாம்.
மற்ற அனைத்தும் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட 5-6 வருடமாக நடந்து வந்தது என்பது உங்களுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பு உண்டு. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும்போதே இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. ‘டீலிமிடைசேஷனும்’ இனி சுலபமாக நடக்கும்.
சரி எதிர்கட்சிகள் பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளதே?
இல்லை, ஒரு வேளை நீதிமன்றத்தை நாடினால், ஏற்கனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தயாராக உள்ளது.
ஒரு வேளை எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் நடத்த விடாமல் செய்தால் என்னவாகும்?
Article 324படி தேர்தலை நடத்த / தள்ளி வைக்க, தேர்தல் ஆனையத்திற்கு சில உரிமைகளை சட்டம் கொடுத்துள்ளது, அதில் நீதிமன்றமும் தலையிட முடியாது.
5 வருடம் முடிவதற்குள் தேர்தல் நடத்த வேண்டும், ஒரு வேளை எதிர்பாராத இயற்கை பேரிடர்கள், போர் போன்ற காரணங்களால் அதிகபட்சம் 6 மாதம் தள்ளி வைக்க முடியும். இன்னொரு 6 மாதம் நாடாளுமன்ற வாக்கெடுப்பு மற்றும் குடியரசுத் தலைவர் ஆணை மூலம் தள்ளி வைக்க முடியும்.
இன்னொரு விதி இதுவரை யாரும் அறியாதது, ஒரு மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் தயாராக இல்லை (SIR அறிவித்த பின்னர்) எனில், தேர்தலைத் தள்ளி வைக்க முடியும்.
அதற்குள் 5 வருடம் முடியும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைத்து, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் ஈடுபடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.
இப்போது கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு பாருங்கள். மேற்கு வங்கம், தமிழகம் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் சில ஏதாவது பிரச்சினை செய்து SIRஐ நடக்கவிடாமல் செய்ய முயன்றால் தேர்தல் தள்ளிப் போகும்.
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விட்டால், இந்தக் கட்சிகளின் கொஞ்சநஞ்ச அதிகாரமும் இல்லாமல் போய்விடும்.
SIR முடியும் வரை தேர்தல் இல்லை என்பதே இறுதி சட்டம். எனவே இந்தக் கட்சிகள் அமைதியாக ஆதரவளிக்க வேண்டிய நிலை.
பொய்யான வாக்காளரை (வெளிநாட்டு, வெளிமாநில வாக்காளர்கள் அல்லது ஒருவரே 2-3 இடத்தில் வாக்களிப்பது) சேர்க்க முயன்றால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதமாகும்.
ஏற்கனவே பிகாரில் கற்ற பாடங்களுடன் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் வரும் சின்ன சின்ன தடங்கல் எதுவுமே இதனை தாமதப் படுத்த முடியாது.
ஒரே நாடு, ஒரே தேர்தல், டீலிமிடைசேஷன் (தொகுதி மறுசீரமைப்பு) எல்லாவற்றிற்கும் எதிர்க்கட்சிகள் சட்டப்படி ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. இல்லாவிட்டால் நாட்டு மக்கள் காரித் துப்புவார்கள். இதுதான் நடக்கும்.
ஜெய் ஹிந்த்!
$$$