கரூரில் நடிகர் விஜய் செப்.27இல் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானது அனைவரும் அறிந்த துயரம். அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், விசாரணையை திசை திருப்பும் வகையிலும், விசாரணை அமைப்புகளுக்கு மறைமுக நிர்பந்தம் தரும் வகையிலும், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தில் திமுக, இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கரூர் கொடூரத்திலிருந்து மாநில ஆளும்கட்சியைக் காப்பாற்ற சிலர் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை அவர்களின் சாயத்தை அம்பலப்படுத்துகிறது என்பதால், அதனை இங்கு பதிவு செய்கிறோம்…. இந்த அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் கண்டித்திருக்கிறது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் வெளியிட உள்ளது.