ஹரன் விருது பெற்றார் வ.மு.முரளி

-ஆசிரியர் குழு

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையமும் ஸ்ரீ டிவியும் இணைந்து நடத்திய வீரவணக்க நாள் மற்றும் சபதமேற்பு நாள் விழா கடந்த 14.08.2025 மாலை சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளிக்கு பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கப்பட்டது.

முன்னதாக, ஸ்ரீ டிவி நிர்வாகி வெங்கடாத்ரி வரவேற்றார். தேசிய சிந்தனையாளர் பேரவையின் தலைவர் ஓமாம்புலியூர் ஜெயராமன் வீரவணக்க நாள் உரையாற்றினார். ராஜேஷ் ராவ் நன்றி கூறினார். வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பால கௌதமன், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அரங்கு நிறைந்த விழாவில், மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாத ஹிந்து அறிவியக்க முன்னோடி அமரர் பி.ஆர். ஹரன் நினைவாக விருது வழங்கப்பட்டது. ஊடகத் துறையில் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவோருக்கு வழங்கப்படும் இவ்விருதை இந்த ஆண்டு பொருள் புதிது தளத்தின் ஆசிரியரான வ.மு.முரளி பெற்றார்.

ஹரன் அவர்களின் தமையனார் பொன்னாடை அணிவித்தார். பேராசிரியர் சீனிவாசன் விருதை வழங்கினார். ஸ்ரீ டிவி தலைவர் பத்மப்பிரியா நினைவுப் பரிசு வழங்கினார். திருவாளர்கள் திராவிட மாயை சுப்பு, சு.விஸ்வநாதன், கோபால்ரத்னம், வித்யா ஸ்ரீதர், நம்பி நாராயணன், பா.பிரபாகரன், பசுத்தாய் கணேசன், துரை.சங்கர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தோழர் பால.கௌதமன் தலைமையில் இயங்கிய விழாக் குழுவினர் இவ்விழாவை சிறப்பாக நடத்தினர்.

“ஒரு பத்திரிகையாளர் எப்படி சமூக உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு அமரர் ஹரன் தனது எழுத்துகளால் வழிகாட்டி இருக்கிறார். அவரது பெயரிலான விருது பெற்றது பெருமகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி!” என்று கூறியிருக்கிறார் விருது பெற்ற வ.மு.முரளி.

விழாவின் சில படங்கள் கீழே…

$$$

Leave a comment