மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

காலம் மாறுகிறது
-துக்ளக் சத்யா
மதுரை முருக பக்தர்கள் மாநாடும், அதைப்பற்றிய செய்திகளும் உணர்ச்சி வசப்பட வைக்கின்றன.
லட்சக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டம் எத்தனை ஒழுக்கத்தோடும் கட்டுபாட்டுடனும் நடந்து கொண்டிருக்கிறது என்பது நாட்டுக்குத் தரப்பட்டுள்ள அற்புதமான மெசேஜ்.
தெய்வ பக்தி என்பது ஹிந்துக்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்குமா என்று அவர்கள் காத்திருக்கின்றனர். அதைத்தான் நிரூபித்துள்ளது இந்த மாநாடு.
பெரியார் மண் என்ற அரசியல் பொய் பிம்பத்தை மண்ணோடு மண்ணாக்கி விட்டது மதுரை.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றிக்கு உரியவர்கள்.
பாராட்டுவோமாக.
***
ஒரு திரைப்படம் எடுக்கும்போது, அதை மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பார்கள் என்று யூகிப்பது ரொம்பவும் கஷ்டம். பிரமாதமாக ஓடும் என்று நினைக்கும் படம் ஒரு வாரத்துக்கு மேல் தாங்காது. சுமாராக எடுத்திருக்கிறோமே, போட்ட பணமாவது தேறுமா என்று நினைத்தால், அமோகமாக ஓடி வியக்க வைக்கும்.
முக நூல் பதிவும் கிட்டத்தட்ட அப்படித்தான் போலிருக்கிறது. மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்து பாராட்டுவதைக் கடமையாகக் கருதித்தான் ஒரு சிறு பதிவைப் போட்டேன். அதற்கு சுமார் 4000 லைக்குகளும், 500 க்கு மேற்பட்ட கமெண்டுகள், 600 க்கு மேற்பட்ட ஷேர்களும் குவிந்தது கண்டு திகைத்துப் போயிருக்கிறேன்.
நம்மையும் அறியாமல், எதையாவது விசேஷமாக சொல்லி விட்டோமோ என்று பயந்து போய் திரும்பத் திரும்பப் பதிவைப் படித்தும், எதற்காக இந்த அளவு response என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
பொதுவாக, கமென்டுகளுக்கு லைக்கும், தேவையானவற்றுக்கு பதிலும் அளிப்பது அடியேனின் வழக்கம். இந்தப் பதிவில் அப்படி செய்ய முடியவில்லை. கமென்ட் போட்ட, ஷேர் செய்த அனைவருக்கும் நன்றி.
ஒன்று மட்டும் புரிகிறது. ஹிந்து முன்னணி அமைப்பு எந்த நோக்கத்துக்காக இந்த மாநாட்டை நடத்தியதோ, அந்த நோக்கமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருக்கிறது. அதுதான் இந்த வரவேற்புக்குக் காரணம்.
- இது மூத்த பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா அவர்களின் முகநூல் பதிவு….
$$$
One thought on “முருக பக்தர்மாநாடு: பிரதிபலிப்புகள்- 3”