தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், தனது எல்லையை மீறி செயல்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று (2025 மே 16) உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுப்பிய கடிதம் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ‘ஜனநாயக நாட்டில், மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கும் சட்டத்தைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் கடமை கொண்ட நீதித்துறை சட்ட நிறைவேற்றத்தை தானே கையில் எடுக்கலாமா?’ என்பதுதான் ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளின் அடிநாதம்.