-திருநின்றவூர் ரவிகுமார்

நம்மைச் சூழ்ந்திருக்கும் கயவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் -சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கும் – ரூப்சந்த் மண்டல் போன்றவர்களே காரிருளில் கதிரொளியாக மிளிர்கிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்த்தில், வக்பு சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய குண்டர்கள் நடத்திய வன்முறையில் இருந்து தப்பிவந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றிய படகோட்டி ரூப்சந்த் மண்டல். நிஜ ஹீரோ. வயது 60.
பாகீரதி நதிக்கரையின் மால்டா பகுதி வைஷ்ணவ நகரிலிருந்து எதிர்கரையிலி ருக்கும் முர்ஷிதாபாத்தின் துலியான் படித் துறைக்கு வந்து படகோட்டுவது ரூப்சந்த் மண்டல் தினசரி செய்து வரும் தொழில்.
வழக்கம் போல கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) காலையில் துலியான் படித் துறைக்கு வந்த போது ஏராளமானோர் படகை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனர்.
இன்று நல்ல சவாரி கிடைக்கும் என்று நினைத்த ரூப்சந்த்தின் நினைப்பு சில நிமிடங்களில் நீர்க்குமிழி போல மறைந்து போனது.
பல பெண்கள் குழந்தைகள் சிறுவர்களு டன் கதறி அழுதபடி நின்று கொண்டிருந் தனர்.
அவர்கள் அனைவரும் அமைதி மார்க்க குண்டர்களிடமிருந்து உயிர்தப்பிப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றிட படகை எதிர்பார்த்து நின்று கொண்டிருப் பதும், அனைவரும் ஹிந்துக்கள் என்பதும் தெரிந்தது.
அக்கூட்டத்தினரிடையே இவரது வருகையை எதிர்பார்த்து தனது மருமகன் நிற்பதையும் பார்த்தார் ரூப்சந்த் மண்டல்.
மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டுக் கொண்டும் முண்டியடுத்துக் கொண்டும் படகினுள் ஏறினர். ஒரே கூச்சல் குழப்பம். அனைவர் கண்களிலும் படகு எப்போது நகரும் என்ற பதட்டம் வேறு.
இதை உணர்ந்த ரூப்சந்த் மண்டல் படகில் மக்களை ஏற்றிக் கொண்டு மறுபக்கமுள்ள மால்டாவிற்கு அன்று மட்டும் 20 தடவை சென்று வந்துள்ளார்.
இதற்காக ஒருவரிடமும் ஒரு ரூபாயைக் கூட கட்டணமாகப் பெறவில்லை.
அனைவரையும் ஏற்றிச் சென்ற பின்பு நின்று கொண்டிருக்கும் தனது மருமகனை இறுதியாக படகில் ஏற்றிச் சென்றார்.
ரூப்சந்த் மண்டல் போன்றவர்களே உண்மையான ஹீரோக்கள்.
போற்றிடுவோம் படகோட்டியை.
‘உடுக்கையிழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவது நட்பு’ என்று சொன்ன வள்ளுவரின் வாக்கினைக் கடைபிடித்துள்ள ரூப்சந்த் மண்டலைப் பாராட்டுவோம்.
மேற்கு வங்கத்தில் என்ன கலவரம் என்று கேட்கிறீர்களா? அது அதிபயங்கரமான வேதனைக் கதை. அதுபற்றி தனியே பார்க்கலாம். கலவரம் நடத்தும் கயவர்களை விட, அவர்களைக் கண்டுகொள்ளாமல் அரசியல் நடத்தும் களவாணிகளை விட, இதுபோன்ற உத்தமர்களே பெரியவர்கள். எனவே இவரைப் பற்றி முதலில் அறிவோம்!
$$$