-கருவாபுரிச் சிறுவன்
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் நான்காம் (நிறைவு) பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)

- காண்க: பகுதி-3
விண்ணப்பமும் வேண்டுகோளும்
ஒருவர் ஆய கலைகளில் சிறந்து விளங்க குருநாதரின் திருவடித்துணை அவசியம் என்பதை இத்தல யாத்திரை உணர்த்துகிறது.
அதே சமயத்தில் சைவத்தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், சைவ சித்தாந்தம் பயிலும் அன்பர்கள், பயிற்றுவிக்கும் ஆசிரியர் பெருமக்கள் தங்களது கனிவான நேரத்தினை ஒதுக்கி இக்கட்டுரையை படித்தமைக்கு நன்றி.
அதே நேரத்தில் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும், இளம் பாலகர்களுக்கும் சித்தாந்தத்தில் தேர்ந்தெடுத்த பாராயணப்பாடல்களை தினமும் ஓத பயிற்றுவியுங்கள். கட்டாயம் சற்குரு நாதர்களின் துதி,அவர்களுடைய அருள் வாக்குகளை குழந்தைகள் மனதில் இடம் பெற வழி வகை செய்யுங்கள்.
50 வயதிற்கு மேல் சித்தாந்தம் படிக்க வேண்டும் என்கிற போலி மனப்பான்மையை தூக்கி எறியச் செய்யுங்கள்.
தனிநபர்களாயின் வாழ்நாளில் ஒரு முறையேனும் பட்டர் பிரான்களால் பாடப் பெற்ற தலத்தினை தரிசனம் செய்ய வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தை உருவாக்குங்கள்.
பட்டர்களால் பாடப்பெற்ற திருக்கோயில்கள் முழுவதையும் ஒரே முறை ஒரே நாளில் தரிசிக்க முடியாது.
பகுதி பகுதியாக திட்டமிட்டுச் செல்ல யாத்திரையை தொடங்குங்கள்.
இது ஒரு வியாபாரமாகவும், பொழுது போக்காகவும் ஆகி விடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கழகம், சபை, திருக்கூட்டமாயின் இணைந்து சென்று பேரின்பம் காண வழிவகுங்கள்.
நகரக் கோயில்களை தவிர்த்து புற நகரங்களில் அதாவது கிராமத்தில் இருக்கும் கோயிலை நம்பி இருபவர்களுக்கு ஒரு நன்னம்பிக்கை பிறக்கட்டும்.
அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் அவர்களுக்கு வசப்பட்டும்.
மொத்தத்தில் பாவ விமோசனம் கிட்டட்டும்.
எதிர்கால சந்ததியருக்கு கோடிப் புண்ணியம் உண்டாகட்டும்.
பட்டர்களின் கருணை வெள்ளத்தில் இருந்து பிறவிப்பிணி அகலட்டும்.
அத்தலங்களை தரிசித்து மகிழ்வீராக.
தர்மத்தின் பாதையில் நடக்க முயல்வீராக.
எடுத்த பிறவிப்பயனை இன்பமுற அனுபவிப்பீராக.
நிறைவாக, மாதவத்தவரின் துதிப்பாடல்களையும், தென்காசி மாவட்ட,ம் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த பேரவையின் போதாகாசிரியரும், சித்தாந்த செல்வருமான த. வேல்மணி அவர்கள் யோகிகள் மீது இயற்றிய வெண்பா மலர்களையும் படித்து அவரது திருவடியிணைகளில் சாற்றி இன்புறுவோமாக.
***
ஓதரிய வாய்மைச் சிவாகமங் கட்கெலாம் உற்றபே ராகரமதாய் ஓங்குதிரு வாவடு துறைப்பதியில் அற்புதக் தொருவடிவு கொண்டருளியே பேதமுறு சமயவா திகளுள மயக்கைப் பெயர்க்கும்ரச குளிகையாகிப் பிரியமுடனேவந் தடுத்தவர்க்கின்பப் பெருங்கருணை மேருவாகி ஆதரித் தடியேங்கள் உண்ணத் தெவிட்டாத அமிர்தசா கரமாகியே அழகு பொலி கலைசைச் சிதம்பரேசுரரடிக் கதிமதுர கவிதைமாரி மாதவர் வழுததப் பொழிந்தருளி யென்றுமவர் மன்னிவளர் சந்நிதியிலோர் மணிவிளக் கெனவளர் சிவஞான மாதவன் மலர்ப்பதம் வணங்குவாமே. -தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் தேசிக நாதன் சிவஞான தேவன் செங்கைத் தலமுன் வீசி நின்றாடிய அம்பலவாணன் வியனு லகம் பேசிய பஞ்சக்க ரவன் பிறங்கருட் டாண் மலரைக் கூசிநின்(று) ஏத்திய மாதவத் தார்க்கென் குறை யுளதே.
***
விநாயகர் காப்பு ஏத்துங் கவிசிறக்க இன்பத் தமிழ்சுரக்க ஆத்தி யடியானே காப்பு. நூல் சிங்கை அமுதே சிவஞான வள்ளலே எங்கள் தவமே இறைவனே உன் - பொங்குதமிழ்ச் சிற்றுரைகள் பேருரைகள் செல்லும் நடையசைவே சிற்றம் பலத்தசையும் கூத்து. (1) எடுத்தென்னும் சொல்லுக்கோர் வைரக்குப் பாயம் படைத்திட்ட ஞானப்போர் வீரா - உடம்பென்னும் ஒவ்வாத குப்பாயத் துட்கிடக்கும் என்பிறவிப் பவ்வக் கரையேற்றப் பார். (2) நன்னுால்தொல் காப்பியத்தின் நுண்பொருளை நாடறியும் வண்ணம் விருத்தி யுரை விரித்த - அண்ணலே என்னுள் உனைக்கரந்தாய் உன்னுள் எனைக்கரக்க என்னை விருத்திசெய்ய வா.(3) அன்னை அறம்வளர்த்தாள் அண்ணல் அருள்கொடுத்தான் தன்னைக் கரந்தழுவத் தண்ணளியால் - மெல்லக் குழைந்தகதை சொன்ன குருமணியே! என்னைக் குழைக்கவுன் இன்னருளைக் காட்டு.(4) தேய்ந்தகலைச் சந்திரன்தான் தேனாடு செஞ்சடைமேல் துாயநில வாய்மலர்ந்தான் தேவே உன் - வாய்மலர் நேரிசை வெண்பாவாய் நீண்ட திருக்குறள்போல் பேரருளை என்னுள் பெருக்கு.(5) பிள்ளைத் தமிழ்பாடிப் பிள்ளை விநாயகரின் எல்லையில்லா இன்ப விளையாட்டில் - வல்வினைக் காடழிந்த வான்கருணை காட்டிநின்ற வித்தகா! நீ வீடளிக்க வீறு கொண்டு வா.(6) தொடர்ந்துவந் தென்னைத் துடியாத வண்ணம் எடுத்தாண்ட அன்னையே என்று - தொடுத்தகோவே செப்பறைப் பாடலில் செப்பிய வாறென்னை எப்படி யாள்வாய் எடுத்து.(7) காணும் உலகெல்லாம் கச்சியே கம்பரின் ஆனந்தக் தாண்டவக் காட்சியே - பேணிக் களிக்கின்ற பெம்மானே! மும்மலத்தில் மூழ்கிக் குளிக்கின்ற என்கதிதான் என்.(8) அந்தமாதி இல்லா அருங்கலசை ஆரமுதை அந்தாதிப் பாவால் அலங்கரித்த- எந்தையே! என் சொத்தே சுகவடிவே! சூழும் வினைஎனக்கு வித்தாகா வண்ணம் அருள்.(9) வீரத் திருமார்பில் வெண்ணீறும் கண்டிகையும் சேரத் தரித்தஞான தேசிகனே! - ஈர விழியோரம் என்னைப் பதப்படுத்தி ஞான ஒளியேறச் செய்வாய் நலம்.(10)
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் பொன்னடி வாழ்க!
ஸ்ரீ சிவஞானயோகிகள் மலரடி வாழ்க!
ஸ்ரீ கச்சியப்ப மாமுனிவர் திருவடி வாழ்க!
***
இப்பாடல்களைத் தொடர்ந்து ‘திருவருட்செல்வர்’ திரைப்படத்தில் இருந்து கவிஞர் கண்ணதாசனின் தெய்வீக வரிகளையும் நம் நெஞ்சில் பதித்து மனம் மொழி மெய்களால் பரம்பொருளைப் பாடி இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
ஆதிசிவன் தாள் பணிவோம்!
-கவியரசு கண்ணதாசன்
பெண்: ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே… ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே… பெண்: ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… பெண்: வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே… திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே… வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே… திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே… பெண்: அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்… அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்… அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே… அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே… பெண்: ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே… பெண்: ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… பெண்: நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா… அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா… நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா… அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா… பெண்: பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா… பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா… அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா… அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா… பெண்: ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே… ஆண்: ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே… ஆண்: ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
(நிறைவு)
$$$
அற்புதம்
LikeLike