-ஹெச்.ராஜா, ரவி.சுந்தரம்
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...

காண்க:
9. தேசபக்தியைப் பெருக்கும் திரைப்படம்
-ஹெச்.ராஜா
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாகக் கொண்டு இயக்குநர் திரு.ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சகோதரர் திரு.சிவ கார்த்தியேன் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைக்காவியத்தின் சிறப்புக் காட்சியை எனது குடும்பத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கண்டு களித்தேன்.
ராணுவ வீரர்களின் வாழ்வியலை கண்ணாடி போலப் பிரதிபலித்து காலத்தால் அழியாத காவியம் போல், திரையில் தீட்டப்பட்ட ஓவியம் போலத் திகழ்கிறது ‘அமரன்’
இத் திரைக்காவியத்தில் சகோதரர் திரு.சிவ கார்த்திகேயன் அவர்கள் மேஜர் திரு.முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தேசபக்தி காவியத்தை திரையில் பார்த்த ஆத்மார்த்த உணர்வு அமரனை கண்டுகளித்த போது எண்ணில் மட்டுமல்ல, அனைவரிலும் ஏற்பட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அற்புதமான நெகிழ்வு.
தமிழகம் கடந்து தேசமெங்கும் ‘அமரன்’ திரைக்காவியத்திற்கு மக்கள் அளித்துள்ள மகத்தான வரவேற்பு எல்லையில் கொட்டும் மழையிலும், உயிரை உறைய வைக்கும் கொடும்பனியிலும் தன்னையே வருத்திக் கொண்டு அனுதினமும் உயிரைப் பணயம் வைத்து தேசம் காக்கப் போராடும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கும் அன்பார்ந்த கெளரவம் என்பதில் ஐயமில்லை.
ராணுவ வீரர்கள் தேசத்திற்காக செய்கிற தியாகங்களையும், எல்லையில் அவர்கள் எதிர்கொள்கிற இன்னல்களையும் நாம் அறிந்து கொள்ள இத்திரைக்காவியம் ஓர் ஆவணம் போல அமைந்துள்ளது.
மக்கள் அனைவரும் குடும்பத்துடன் இத்திரைக்காவியத்தை காண வேண்டும் என்பது எனது அபிப்ராயம்.
இயக்குநர் திரு.ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சகோதரர் திரு.சிவ கார்த்திகேயன் இருவரின் திரையுலக வரலாற்றிலும் ‘அமரன்’எனும் காலத்தால் அழியாத அமரகாவியம் என்றென்றும் களங்கரை விளக்கமாக திகழும் என்பதில் மிகையேதும் இல்லை.
அமரன் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும் தமிழக பாஜக சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
- திரு. ஹெச்.ராஜா, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்.
$$$
10. இது தான் உண்மையான ஜாதி மதம் கடந்த உதாரண ஜோடி!
-ரவி.சுந்தரம்
உவே சாமிநாத ஐயரை மறைப்போம். மறப்போம்.
வ.வே.சு. ஐயரை மறைப்போம். மறப்போம்.
வாஞ்சிநாத ஐயரை மறைப்போம். மறப்போம்.
நீலகண்ட சாஸ்திரியை மறைப்போம். மறப்போம்.
இவர்கள் யாரும் தங்கள் ஜாதிக்காக உழைத்து செல்லவில்லை!
அது போலத்தான் திரு. முகுந்த் வரதராஜன்!
இவரும் தன் ஜாதிக்கு பெருமை சேர்க்க ராணுவத்தில் சேரவில்லை!
இதுபோல லட்சம் பிராமணர்கள் வடக்கேயும் தெற்கேயும் மற்ற சாதியினரைப் போல ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய துணிந்துள்ளனர். இன்னமும் துணிவார்கள்.
திராவிடத்தின் பிரச்சினை என்னவென்றால், இந்த உண்மை, இவர்கள் இதுகாறும் கட்டி வைத்து வியாபாரம் செய்து வந்த பிராமண பிம்பத்திற்கு எதிரானது. எனவே நுணுக்கமாக அதை மறைக்க முயல்கிறார்கள்.
இதே வேலையை தான் ‘சூரரைப் போற்று’ படத்திலும், கேப்டன் கோபிநாத் விஷயத்தில் செய்தார்கள்.
இவர்கள் அந்த விஷயத்தைத் தொடாமல் சென்றிருந்தாலே யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள்.
இத்தனைக்கும் திரு. முகுந்த் காதலித்து மணந்தது ஒரு கிறிஸ்தவப் பெண். ஆக இது தான் உண்மையான ஜாதி மதம் கடந்த உதாரண ஜோடி! இந்தத் திருமணத்தை மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பமும் ஏற்றுக் கொண்டதே!
உண்மையில் ஜாதி மத பிரிவினை ஒழிப்புதான் திராவிடத்தின் குறிக்கோள் என்றால் இந்த ஜோடியை நீங்கள் உயர்த்திப் பிடித்திருக்க வேண்டுமே!
ஆக.. இவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.
காரணம் இவர்களின் நோக்கம் அதுவல்ல!
இவர்கள் ஒரு வக்கிர முட்டாளின் சீடர்கள் அல்லவா?
அவரது முடக் கொள்கையில் ஊறி ஒரு இன ஒழிப்புக்கும் கூட தயாராகும் வெறி நாய்க் கூட்டம்.
இப்படித்தான் நுணுக்கமாக உண்மைகளை மறைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் பிராமண சமூகத்தைப் பற்றி இவர்கள் கட்டி வைத்த பிம்பத்திற்கு உதவும். அதன் அடிப்படையில் வியாபாரம் செழிக்கும்.
ரூ. 10,000 கோடிகள் கொண்ட டிரஸ்ட் தொடர்ந்து இயங்கும்.
இல்லையென்றால் நம்ம முரசொலி மாறன் ஒரு ஐயங்கார் வீட்டுப் பெண்ணை மணமுடித்தது போன்ற விஷயங்களை கம்பளத்தின் கீழ் ஏன் மறைக்கிறார்கள்?
பி. கு:- இன்று முகுந்த் ஜாதியை வேண்டுமென்றே மறைத்தது பற்றிப் பொங்கும் பல பிராமணர்கள் அதே முகுந்தின் திருமணத்தைப் பற்றி பேசத் தயங்குவார்கள். அது தான் நிதர்சனம். அது வேறு விஷயம்.
- இது முகநூலில் பதிவர் ரவி.சுந்தரம் எழுதியுள்ள பதிவு.
$$$
One thought on “அமரன் – மேலும் சில பார்வைகள் -3”