முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.