-மது ஜெகதீஷ்
முழுமுதற்கடவுளாக நம்மால் வணங்கப்படும் விநாயகமூர்த்தி, தேசத்தின் பண்பாட்டு வேராக நம்மை ஒருங்கிணைத்து வருகிறார். காலங்கள் கடந்த, நில எல்லைகள் கடந்த கடவுளான இந்த கணேசரை, விநாயக சதுர்த்தி நன்னாளில், சிற்ப ஒளிப்பதிவுகள் மூலமாக நம்மை தரிசிக்கச் செய்திருக்கிறார், சிற்ப புகைப்படக் கலைஞரான பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ்...
கணேசர் சிற்பங்கள் பல்வேறு காலகட்டங்களில்… (பல்லவர், சோழர், சாளுக்கியர், ஹொய்சாளர், காகதீய, விஜயநகர் ) பலவிதமான கலை வடிவங்களில்…
1. சத்யகிரீஸ்வரர் கோவில், திருமயம், தமிழ்நாடு
(7 ஆம் நூற்றாண்டு, பல்லவர் காலம்)

2. கணங்கள் சூழ்ந்த கணபதி, பிரம்மபுரீஸ்வரர் கோவில், புள்ளமங்கை, தமிழ்நாடு
(907-955, முதலாம் பராந்தக சோழன்)

3. பெருவுடையார் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு
(985-1014, முதலாம் ராஜராஜ சோழன்)

4. தென் கைலாயம், ஐயாரப்பர் ஆலயம், திருவையாறு, தமிழ்நாடு
(11 ஆம் நூற்றாண்டு, முதலாம் ராஜேந்திர சோழன்)

5. கம்போடியா
(11-12 ஆம் நூற்றாண்டு, கெமர் வம்சம்)

6. கம்போடியா
(11-12 ஆம் நூற்றாண்டு, கெமர் வம்சம்)

7. ராமப்பா கோவில், பாலம்பேட், வாரங்கல், தெலங்கானா மாநிலம்
(1199-1262, கணபதி தேவன், காகதீயர்)

8. ராமப்பா கோவில், பாலம்பேட், வாரங்கல், தெலங்கானா மாநிலம்
(1199-1262, கணபதி தேவன், காகதீயர்)

9. ராணி-கி-வாவ், பதான், குஜராத் மாநிலம்
(1022-1064, ராணி உதயமதி, சாளுக்கியர்/சோலங்கி வம்சம்)

10. ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடக மாநிலம்
(1121-1160, விஷ்ணுவர்த்தனன்)

11. வீர நாராயணர் ஆலயம், பெலவாடி, கர்நாடக மாநிலம்
(1200 – வீர வல்லாளன்)

12. ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடக மாநிலம்
(1121-1160, விஷ்ணுவர்த்தனன்)

13. ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடக மாநிலம்
(1121-1160, விஷ்ணுவர்த்தனன்)

14. ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடக மாநிலம்
(1121-1160, விஷ்ணுவர்த்தனன்)

15. சென்னகேசவர் ஆலயம், பேலூர், கர்நாடக மாநிலம்
(1121-1160, விஷ்ணுவர்த்தனன்)

16. நாட்டிய கணபதி, கர்நாடக மாநிலம்
(11 ஆம் நூற்றாண்டு)

17. வீரபத்திரர் கோவில், லெபாக்ஷி, ஆந்திர மாநிலம்
(16 ஆம் நூற்றாண்டு, விஜயநகரப் பேரரசுக் காலம்)

18. வீரபத்திரர் கோவில், லெபாக்ஷி, ஆந்திர மாநிலம்
(16 ஆம் நூற்றாண்டு, விஜயநகரப் பேரரசுக் காலம்)

19. சுப்ரமணியர் சன்னிதி, பெரிய கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு
(16-17 ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலம்)

20. சுப்ரமணியர் சன்னிதி, பெரிய கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு
(16-17 ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலம்)

21. சசிவேகலு கணேசர், ஹம்பி, கர்நாடக மாநிலம்
(14-15 ஆம் நூற்றாண்டு, விஜயநகரப் பேரரசுக் காலம்)

22. கடலேகலு கணேசர், ஹம்பி, கர்நாடக மாநிலம்
(14-15 ஆம் நூற்றாண்டு, விஜயநகரப் பேரரசுக் காலம்)

23. ஜான்சி, உத்தரப்பிரதேசம்
(8 ஆம் நூற்றாண்டும் குப்தர் காலம்)

24. கஜுராஹோ, மத்திய பிரதேசம்
(930-950, யசோவர்மன், சந்தேலா வம்சம்)

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
-ஔவையார் (மூதுரை-1)
$$$