சநாதன தர்மம் வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு- மேலும் இரு செய்திகள்

சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இது தொடர்பான மேலும் இரு செய்திகள் இங்கே…

மகாகவி புதுவைக்குப் போனது ஏன்?

மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அவர் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி. அங்குதான் அவருக்கு அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் போன்ற பெரியோர்களின் தொடர்பு கிடைத்தது. அங்குதான் அவருடைய முப்பெரும் பாடல்கள் உள்ளிட்ட பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் உருவாயின. அங்குதான் பாரதியின் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அவர் உயிர் காத்த குவளைக் கண்ணனின் தொடர்பும் அங்குதான் கிடைத்தது.