இரு ஆண்டுகள் நிறைவு: ஒரு மீள்பார்வை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022 மார்ச் 1) பொருள் புதிது இணையதளம் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்பணியை மீள் பார்வை செய்ய வேண்டியது நமது கடமை. கடந்த இரு ஆண்டுகளில், ஒருநாள் கூட இடைவெளியின்றி, புதிய பதிவுகளை வலையேற்றி உள்ளோம் என்பதே மிகவும் திருப்தி அளிக்கிறது. இது வரையிலான 730 நாட்களில் 1,673 பதிவுகளை (கட்டுரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள்) நமது தளத்தில் பதிவேற்றியுள்ளோம்.

பாரத சாவித்ரி

அற்புதமான சமஸ்கிருத சுலோகங்களை தமிழில் பதிவு செய்வதை ஒரு கடமையாகச் செய்து வருபவர் எழுத்தாளர் திரு. ஜடாயு. ‘பாரத சாவித்ரி’ என்ற தலைப்பிலான, மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஐந்து சுலோகங்கள் நாம் அறிய வேண்டியவை...