நாடகக் கலை – அணிந்துரையும் முன்னுரையும்

சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...

அயோத்தி கோயில்- மேலும் இரு நூல்கள்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள மேலும் இரு நூல்களை அறிமுகம் செய்கிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

நிர்வாக மேலாண்மைத் திறனும் செயலின்மையும்…

பகவத் கீதை - நான்காம் அத்தியாயத்தின் (ஞான கர்ம சந்யாச யோகம்) அடிப்படையில் பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, செயலூக்கத்திலும் செயலின்மையிலும் ஒரே யோகநிலையின் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது...

ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு: நூல் அறிமுகம்

ராமருக்கு ஏன் இந்த மகத்துவம், தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம் என்று தொடங்கும் இந்த நூலில், அயோத்தி ராமர் பிறந்த இடத்தில் பாபர் காலத்தில் நடந்தது தொடங்கி இப்பொழுது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயிலின் சிறப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளது.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 7

மற்ற புலவர்களோடு பழகியபோது அவரவர்கள் தாம் தாம் சென்று கண்டு பாடிய செல்வர்களைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பல காலம் முயன்ற பின்பு மனங்கனிந்த கல் நெஞ்சக்காரர்கள் சிலரைப் பற்றிக் கேள்வியுற்றார். புலவர்கள் தம்மை வானளாவப் புகழ அதனால் மகிழ்ச்சி பெற்று ஓரளவு பரிசில் வழங்கும் தன்னலத்தினர் சிலரைப் பற்றியும் கேள்வியுற்றார். புலவர்களுக்கு அளித்தால் ஊரார் புகழ்வர் என்ற எண்ணத்தால் சில புலவர்களுக்குப் பொருள் வழங்கி அதனைத் தாமே யாவருக்கும் ஆரவாரத்தோடு எடுத்துச் சொல்லும் அகங்கார மூர்த்திகள் சிலரைப் பற்றி அறிந்தார். பாடலின் நயத்தைப் பாராமல் தம் பெயரைப் பாட்டில் அமைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பரிசளிக்கும் சிலரைப் பற்றியும் அறிந்தார். அத்தகைய செல்வர்களிடம் போவதைவிட வறுமையால் வாடுவதே நன்று என்று எண்ணினார் பெருஞ்சித்திரனார்.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 6

‘யானைக்குத் தழையுணவைக் கொடுக்கிறோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது.  “அடடா, இதை இது உண்ண வேண்டுமென்றல்லவா கொடுத்தோம்? இது இங்கே துக் கொண்டு விட்டதே” என்று கவலைப் படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும். யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும் பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றதுதான். அது கிடைக்காமற் போகாது. இதை அனுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே அப்படியிருந்தும் நீ ஐயுறலாமோ! ..’

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 5

“தமிழுக்கு எங்கே போனாலும் மதிப்பு உண்டு என்பது உண்மைதான். ஆனாலும் அப்படி மதிப்பிட்டு உபசரிப்பதிலும் தரம் இருக்கிறதே! புலவர்களின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்பப் பேணும் இயல்பு உயர்ந்தது என்று யாவரும் சொல்கிறார்கள். உபகாரிகளிலும் வேறுபாடு இருக்கிறது. பரிசில் தருவதனால் எல்லாப் புரவலர்களும் ஒரே மாதிரி இருப்பவர்கள் என்று கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலும் தகுதியினால் வேறுபாடு உண்டு; வரிசை உண்டு.”

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 4

சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது. புலவர் நாவறிந்தது. தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறமம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 3

வெற்றி பெற்றுப் பகைவருடைய புறம் பெற்ற வேந்தனை எல்லோரும் பாராட்டினார்கள். கலைஞர்கள் பழுத்த மரத்தை நாடும் பறவைகளைப் போல வந்தார்கள். புலவர்கள் அழகான பாடல்களைப் பாடித் தந்தார்கள். அந்தப் பாடல்களைத் தன்னுடைய இனிய குரலால் பாடினாள் ஒரு விறலி. பகைவருடைய புறம் பெற்ற வலிமையையுடைய சேர வேந்தனது வீரத்தை இன்னிசையோடு விறலி பாடினாள். அப்படி மறம் பாடிய பாடினி, பாட்டு மகள், ஒரு பரிசு பெற்றாள். பெண்களுக்கு எதைக் கொடுத்தால் உள்ளம் மகிழும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மன்னர்கள். விறலியர் பாடினால் அவார்களுக்குச் சிறந்த பொன்னணிகளை வழங்குவது அக்கால வழக்கம். இந்த விறலியும் பொன்னிழையைப் பெற்றாள்.

பொது சிவில் சட்டம் தேவை என்றவர் அம்பேத்கர்

பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறியது என்ன என்று இக்கட்டுரையில் விளக்குகிறார், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான ஹெச்.வி.ஹண்டே.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 2 ஆ

அந்த நெடியோன் பாண்டிய குலத்தில் வந்த பெரிய மன்னர்களில் ஒருவன். ஒருகுலத்தில் பல மன்னர்கள் பிறந்திருந்தாலும், யாரேனும் சிலருடைய பெயராலே அந்தக் குலத்தைக் குறிப்பது வழக்கம். அந்தப் பெயரை உடையவர்கள் மிக்க சிறப்பைப் பெற்றவர்கள் என்பதை அவர்கள் குலம் என்று சுட்டிச் சொல்லும் வழக்கத்தினால் உணரலாம். சூரிய வம்சத்தில் பலர் உதித்தாலும் ரகு என்ற மன்னன் சிறந்தவனாக இருந்தான். அதனால் ரகுகுலம் என்ற பெயர் இராமன் பிறந்த குலத்துக்கு ஏற்பட்டது....

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 2 அ

பாரத தேசத்தில் பழங்காலம் முதற் கொண்டே போர் நடந்து வந்ததுண்டு. ஆனால் அந்தப் போர்களில் சில வரையறை இருந்தன. இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னமுறையில் போர் செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தது. இராமாயணப் போரில் இராமன் வெறுங் கையுடன் நின்ற இராவணனைக் கொல்லாது,  ‘நாளை வா’ என்று கூறி அனுப்பியது அறச் செயல். இத்தகைய பல அறச் செயல்கள் போரிடையிலும் நிகழ்வதால் அது போரேயானாலும் அறப்போராக இருந்தது.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 1

கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத் துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார்.சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்ற  கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை. ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம்.  ‘அருந்தவ முதல்வன்’ (கலி.100:7) என்று கலித்தொகை பேசுகிறது....

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- முகவுரை

பழந் தமிழ் இலக்கியத்தின் சிறந்த நூல்களின் ஒன்றான புறநானூறில் சில பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு இனிய சொற்சித்த்ரத்தைத் தீட்டுகிறார் அமரர் கி.வா.ஜ. வாருங்கள் அந்த இனிய தமிழில் தோய்வோம்...

சநாதன தர்மம்: ஒரு நுண்ணிய பார்வை

மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள பேரா. பா.மஹாதேவன், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.