சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் நூலகராகப் பணியாற்றிவரும் திரு. ரெங்கய்யா முருகன், வ.உ.சி. ஆய்வாளரும் கூட. வ.உ.சி. மீது அளப்பரிய மரியாதை கொண்ட இவர், அவரை அழைக்கும்போதெல்லாம் பெரியவர் என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. இவரது முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது…
Day: February 23, 2024
நந்தனார் சரிதம் – 6
எம்பெருமான் வந்துவிட்டார். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இருந்து இரண்டு பக்கமிருந்தும் நான்கு கரங்கள் முளைத்து நந்தனைத் தூக்கிப்பிடித்தன. நந்தனுக்குள் ஒரு புது உத்வேகம் எழுந்தது. ஊராரின் பஞ்சாட்சர கோஷம் அவனுக்குள் ஆவேசத்தைத் தூண்டியது. நிமிர்ந்து பார்த்தபோது தென்பட்ட திரிசூல மின்னல் அவன் கண்கள் வழி பாய்ந்ததுபோல நிலை குத்திய கண்களுடன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய உடல் இப்போது விறைத்து எழுந்திருந்தது. கால் நடுக்கம் மறைந்திருந்தது. ஒவ்வொரு அடியாக அவன் அழுந்த எடுத்து வைக்க வைக்க நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.