அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 3

வெற்றி பெற்றுப் பகைவருடைய புறம் பெற்ற வேந்தனை எல்லோரும் பாராட்டினார்கள். கலைஞர்கள் பழுத்த மரத்தை நாடும் பறவைகளைப் போல வந்தார்கள். புலவர்கள் அழகான பாடல்களைப் பாடித் தந்தார்கள். அந்தப் பாடல்களைத் தன்னுடைய இனிய குரலால் பாடினாள் ஒரு விறலி. பகைவருடைய புறம் பெற்ற வலிமையையுடைய சேர வேந்தனது வீரத்தை இன்னிசையோடு விறலி பாடினாள். அப்படி மறம் பாடிய பாடினி, பாட்டு மகள், ஒரு பரிசு பெற்றாள். பெண்களுக்கு எதைக் கொடுத்தால் உள்ளம் மகிழும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மன்னர்கள். விறலியர் பாடினால் அவார்களுக்குச் சிறந்த பொன்னணிகளை வழங்குவது அக்கால வழக்கம். இந்த விறலியும் பொன்னிழையைப் பெற்றாள்.

பொது சிவில் சட்டம் தேவை என்றவர் அம்பேத்கர்

பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறியது என்ன என்று இக்கட்டுரையில் விளக்குகிறார், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான ஹெச்.வி.ஹண்டே.