திருநாளைப்போவார் நாயனார் புராணம்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தை சேக்கிழார் பெருமான் இயற்றி அருளினார். ஈசன் அடியார் எப்பிறப்பாயினராயினும் இணையானவரே என்பதை இந்நூல் உறுதிபடக் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சமூக சமத்துவம் நாடிய அருளாளரான சேக்கிழார் பெருமானின் இந்நூல், அனைவரும் படித்தேற வேண்டியதாகும். இதில் இடம்பெற்றுள்ள ‘திருநாளைப்போவார் நாயனார் புராணம்’ (நந்தனார் சரிதம்) தற்காலத்தின் தேவை கருதி இங்கே பதிவாகிறது...

இந்திய விமானப் படை: பெயர் மாற்றமும் களம் மாற்றமும்

இந்திய விமானப் படை (IAF - Indian Air Force) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் இந்திய விமானம் மற்றும் வான்வெளிப் படை அல்லது இந்திய வான் மற்றும் விண்வெளிப் படை (IASF - Indian Air and Space Force) என பெயரிடப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் மாற்றம் இதுவரை  ‘தீரமிகு விமானப்படை’ என்றிருந்தது, வரும் காலத்தில்  ‘மதிப்புமிக்க விண்வெளிப்படை’யாக மாறுவதன் ஓர் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. உலகில் மட்டுமின்றி புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாலும் தனது பாதுகாப்பு சேவையை விரிவாக்குவதற்கான இந்திய விமானப்படையின் தொலைநோக்குப் பார்வை - 2047 என்ற மாற்றத்திற்கான திட்ட வரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.