மகாகவி பாரதியின் சொல்லாட்சி

ஒரு மொழி உயிர்ப்போடு சிலிர்த்தெழ வேண்டுமானால் புதுப்புதுச் சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், பிற மொழியிலிருந்து பெயர்த்துக் கொணர்ந்த புத்தம் புதிய மொழியாக்கங்கள் - இவற்றைக் கொண்டு நாளுக்கு நாள் மொழியின் கட்டமைப்பை இளமைத் துடிப்போடு வைத்திருக்க வேண்டும். அந்தப் பணியைத் தொடங்கி வைத்த பெருமை நம் மகாகவிக்கே உரித்தானது.

தமிழ்நாட்டின் விழிப்பு

ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும்.