-ஷோபனா ரவி

“எல்லாரும் மகிழ்ந்திருக்கட்டும்! எல்லாரும் உடல் உபாதையின்றி இருக்கட்டும்! எல்லாரும் நல்லவற்றைக் கண்டுகொள்ளட்டும்! யாருமே துன்பம் அனுபவிக்க வேண்டாம். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!”
இந்தப் பொருள்பட ஒரு சமஸ்க்ருத ஸ்லோகம் இருக்கிறது. எழுதியது யார் என்று தெரியவில்லை. எல்லா ஜீவராசிகளையும் வாழ்த்தி அரவணைக்கும் சனாதன அன்பு வெள்ளத்தில் திளைத்த பலரும் பலகாலமாக உச்சரிக்கும் மந்திரம் இது. இதுவே பாரதபூமியின் பண்பாடு.
இதனைப் பாதுகாக்க வானோரும் மேலோரும் இங்கே வரிசையாக வந்து மீண்டும் மீண்டும் பிறப்பர். எந்த சக்தியாலும் ஹிந்து தர்மத்தை அழிக்க முடியாது.
வள்ளுவரும் இளங்கோவும், ஆண்டாளோடு ஆழ்வார்களும், நாயன்மாரும் ஜயதேவரும் சைதன்யரும், மீராவோடு கபீர்தாசரும் சமர்த்த ராமதாசரும், பக்த துக்காராமும் விட்டலன் பரிவாரங்களும், சதாசிவ பிரம்மேந்திரரும் அன்னமாச்சாரியரும், கம்பநாடரும் அருணகிரியாரும் குமரகுருபரரும், தியாகையரும் தீக்ஷிதரும் ஸ்யாமா சாஸ்திரியும், பாரதியும் தாகூரும், பாபநாசம் சிவனும் மீண்டும் மீண்டும் வேறு வேறு பெயர்களில் தெய்வதத்தைப் போற்ற வேண்டி இங்கே அவதரித்துக் கொண்டே இருப்பர்.
புத்தரும் வருவார்; கூடவே சங்கரர் வருவார். அடுத்து ராமானுஜரும் மத்வரும் வேறு பெயர்களில் பூமிக்கிறங்கி வந்து பாரதத்தில் பிறப்பர். மஹாவீரரும் குருநானக்கும் வந்து பாரதத்துவத்தை நிலைநாட்டிச் செல்வர்.
“குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும்போழ்..” என்றும், “துனியாகே ரக்குவாலே” என்றும் ஜேசுதாசும் முகம்மது ரஃபியும் போல இறையை உணர்ந்த பக்தர்கள் உருகிப் பாடிக்கொண்டே இருப்பர்.
பக்தியையும் ஞானத்தையும் அவமதிப்போர் இந்த மண்ணில் காலூன்ற முடியாது. இந்தப் புண்ணிய பூமியைப் பாதுகாக்கத் தயாராகப் பெரிய பக்தர் படையே உள்ளது!
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः । सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाग्भवेत् । ॐ शान्तिः शान्तिः शान्तिः ‘Sarve bhavantu sukhinah, Sarve santu niramayah, Sarve bhadrani pashyantu, Ma kashchit duhkha bhagbhavet On Shanti Shanti Shantihi.’ ‘May all be happy! May all be free from illness! May all see what is good! May no one suffer! Om Shanti Shanti Shantihi!’
- நன்றி: கட்டுரையாளரின் முகநூல் பதிவு.
$$$