மகாகவி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டு, காயத்ரி மந்திரம் உபதேசம் பெற்ற ஹரிஜன இளைஞர் ரா.கனகலிங்கம், ‘என் குருநாதர்’ என்ற நூலில் எழுதியது இது.
Day: April 29, 2023
பிராமண எதிர்ப்பு மூடத்தனம்!
1959-இல், திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தேவர் ஹாலில் நடைபெற்றது. அதன் திறப்பாளரான ஈ.வெ.ராமசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தும், ‘நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசி முடித்து அமர்ந்தார். அடுத்துப் பேசிய இளம் எழுத்தாளர் (அப்போது அவருக்கு வயது 25!) திரு. ஜெயகாந்தன் பேசியதன் சுருக்கம் இது...